உலகின் பழம்பெரும் மொழி தமிழ்: பிரதமர் மோடி பெருமிதம் 

உலக மக்கள் அனைவரும் ஒன்றே என்ற சிந்தனை உள்ளவர்கள் நாங்கள். 3000 ஆண்டுகளுக்கு முன், உலகின் மிகப்பழமையான மொழியான தமிழில், கவிஞர் கனியன் பூங்குன்றனார், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றுள்ளார்
 | 

உலகின் பழம்பெரும் மொழி தமிழ்: பிரதமர் மோடி பெருமிதம் 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் 74வது கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: "உலக அளவில் அதிக ஓட்டுகளை பெற்று எங்கள் கட்சி இந்தியாவில் ஆட்சி அமைத்துள்ளது. உலக அளவில் மிகப்பெரிய அளவிலான தூய்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோடிக்கணக்கில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. 

உலக மக்கள் அனைவரும் ஒன்றே என்ற சிந்தனை உள்ளவர்கள் நாங்கள். 3000 ஆண்டுகளுக்கு முன், உலகின் மிகப்பழமையான மொழியான தமிழில், கவிஞர் கனியன் பூங்குன்றனார், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றுள்ளார். உலகில் உள்ள எல்லா நாடுகளும் ஓர் நாடே. எல்லா மக்களும் உறவினர்களே எனும் தத்துவத்தை கொண்டவர்கள் நாங்கள். அதனால்தான் பயங்கரவாதத்தை கடுமையாக எதிர்க்கிறோம்" என்றார். 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP