உலகின் மிக பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி!

உலகின் மிக பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. மைக்ரோசாப்ட்டின் இணை நிறுவனரான மறைந்த பால் ஆலெனின் கனவுத்திட்டமான ஸ்டிராட்டோலான்ச் விமானம் சோதனைக்காக கலிபோர்னியா மாகாணத்தில் முதன்முறையாக இயக்கப்பட்டது.
 | 

உலகின் மிக பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி!

உலகின் மிக பெரிய விமானமான ஸ்டிராட்டோலான்ச்சின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. மைக்ரோசாப்ட்டின் இணை நிறுவனரான மறைந்த பால் ஆலெனின் கனவுத்திட்டமான ஸ்டிராட்டோலான்ச் விமானம் சோதனைக்காக கலிபோர்னியா மாகாணத்தில் முதன்முறையாக இயக்கப்பட்டது.

ஸ்டிராட்டோலான்ச் விமானத்தின் இரண்டு இறக்கைகளுக்கு இடையேயான தொலைவு மட்டும் 385 அடி ஆகும். கால்பந்து ஆடுகளத்தின் நீளத்தை விட பெரியதாக இருக்கும் இது தான் உலகின் மிக பெரிய விமானமாகும்.

இந்த விமானம் பறக்கும் போதே விண்கலங்களை ஏவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், விண்கலங்களை பூமியின் நிலப்பரப்பிலிருந்து ஏவுவதைவிட, வானிலிருந்து ஏவி செலவை குறைக்க முடியும்.

இருவேறு விமானங்களை ஒருங்கே கொண்டது போன்று, 6 இன்ஜின்கள் மற்றும் 28 சக்கரங்களுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் பயணத்தில் இரண்டரை மணி நேரம் பறந்த இந்த பெரிய விமானம், சுமார் 15,000 அடி உயரம் வரை சென்றது. பின்னா் புறப்பட்ட இடத்திலேயே பத்திரமாக தரை இறங்கியது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP