உலகின் க்யூட்டான நாய் 'பூ' உயிரிழந்தது!

உலகின் க்யூட்டான நாய் என்ற பெயரைப் பெற்ற பூ என்ற பொமரேனியன் நாய் தனது 12வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது. இது உலகளவில் நாய் பிரியர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
 | 

உலகின் க்யூட்டான நாய் 'பூ' உயிரிழந்தது!

உலகின் க்யூட்டான நாய் என்ற பெயரைப் பெற்ற பூ என்ற பொமரேனியன் நாய் தனது 12வது வயதில் உயிரிழந்தது. 

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் பூவின் பெயரால் தொடங்கப்பட்ட சமூக வலைத்தளம் ஒன்றில் அதனை 17 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். அதன் வலைதளத்தில் பூவின் தினசரி சேட்டைகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தன. இதனிடையே, அந்த உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்தது. இதுகுறித்து அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

அவர்கள் கூறும் போது, "பூவுடன் நாங்கள் வளர்த்துவந்த நாய்க்குட்டி ஒரு வருடத்திற்கு முன்பு உயிரிழந்தது.அதன் பின் பூவுக்கு இதயக் கோளாறுகள் ஏற்பட தொடங்கியது. இந்நிலையில் பூ தூக்கத்திலேயே உயிரிழந்தது. தற்போது பூ எங்களுடன் இல்லை என்பது வருத்தம் அளித்தாலும். தற்போது அவன் எந்த வலியையும் அனுபவிக்க வேண்டாம் என்பதை நினைத்து எங்களை சமாதானப்படுத்திக் கொள்கிறோம்" என தெரிவித்துள்ளார். இதையடுத்து பூவுக்கு ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP