ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்த அதிசயப் பெண்!

பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பிறந்துள்ள அதிசய நிகழ்வு அமெரிக்காவில் நடந்துள்ளது.ஒன்பது மணிநேர இடைவெளியில் பிறந்துள்ள இக்குழந்தைகளில் இரு ஜோடி ஆண் குழந்தைகள், ஒரு ஜோடி பெண் குழந்தைகள் அடங்கும்.
 | 

ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்த அதிசயப் பெண்!

பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பிறந்துள்ள அதிசய நிகழ்வு  மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவின் டெக்டாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரைச் சேர்ந்தவர் தெல்மா சியாகா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு, நேற்றிரவு பிரசவ வலி ஏற்படவே டெக்சாஸில் ஒரு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பிறந்துள்ளன. ஒன்பது மணிநேர இடைவெளியில் பிறந்துள்ள இக்குழந்தைகளில் இரு ஜோடி ஆண் குழந்தைகள், ஒரு ஜோடி பெண் குழந்தைகள் அடங்கும்.

குழந்தைகள் ஒவ்வொன்றும் 500 கிராம் முதல் ஒரு கிலோ எடையுடன் உள்ளதாகவும், தாயும் -சேய்களும் நலமாக இருந்தாலும் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பல கோடி பேர்களில் ஒருவருக்கு இதுபோன்று ஒரே பிரசவத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP