அமெரிக்க வழிபாட்டுத்தலத்தில் துப்பாக்கிச்சூடு: பெண் ஒருவர் பலி!

அமெரிக்காவில் வழிபாட்டுத்தலம் ஒன்றில் இன்று நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலியானார். . மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 | 

அமெரிக்க வழிபாட்டுத்தலத்தில் துப்பாக்கிச்சூடு: பெண் ஒருவர் பலி!

அமெரிக்காவில் வழிபாட்டுத்தலம் ஒன்றில் இன்று நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலியானார். 

அமெரிக்காவின் சான் டைகோ(San Diego) என்ற நகரத்தில் போவே என்ற இடத்திலுள்ள வழிபாட்டுத் தலத்தில் அடையாளம் தெரியாத மர்ம நகர் ஒருவர் இன்று துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய 19 வயது இளைஞரை அமெரிக்க போலீசார் கைது செய்து விசாரணையத் தொடங்கியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதேபோன்று சில மாதங்களுக்கு முன்னதாக, அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் (pittsburgh) என்ற இடத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP