அமெரிக்க சுதந்திர தேவி சிலை மீது ஏறிய பெண்: போராடி கைது செய்த போலீஸ்!

அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை மீது ஏறிய மர்ம பெண் 2 மணி நேரே முயற்சிக்கு பின் போலீசாரால் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
 | 

அமெரிக்க சுதந்திர தேவி சிலை மீது ஏறிய பெண்: போராடி கைது செய்த போலீஸ்!

அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை மீது ஏறிய பெண் 2 மணி நேரே முயற்சிக்கு பின் போலீசாரால் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டார். 

அமெரிக்காவின் முக்கிய அடையாளங்களில் ஒன்று சுதந்திர தேவி சிலை. இது நியூயார்க் நகரின் பிரதான இடத்தில் துறைமுகப் பகுதியில் சுமார் 95 மீட்டர் உயரத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது. சுதந்திர தேவி சிலை மீது நேற்று மனித உருவம் ஒன்று ஏறிச்சென்று உட்கார்ந்து கொண்டிருப்பதாக நியூயார்க் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு விரைந்த அவசரக் குழு மற்றும் போலீசார் சுதந்திர தேவி சிலையை சுற்றி தேடுதல் வேட்டை நடத்தினர். சிலையின் மேலே உள்ள பீடத்தில் மர்ம நபர் ஒருவர் இருப்பதை கண்டனர். அவரை கீழே இறங்குமாறு கேட்டுக் கொண்ட நிலையில், அதனை அவர் மறுத்துவிட்டார். பின்னர் நான்கு மணி நேர போராட்டத்துக்கு பிறகு அந்த நபரை கீழே இறக்கும் முயற்சி வெற்றியடைந்தது. அந்த நபர் ஒரு பெண் என்றும் போராட்டம் செய்வதற்காக சிலை மீது ஏறியதும் தெரிய வந்தது. 

அவரிடம் நடத்திய விசாரணையில், அமெரிக்காவி்ல் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை ஏஜென்சி முறையை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிலைமீது ஏறி போராட்டம் நடத்த முயன்றதாக கூறினார். இந்த மீட்பு பணியால் நியூயார்க் நகரில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான படங்களும் வீடியோவும் வைரலாகி வருகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP