இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படுமா?: டிரம்ப் பதில்

இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு, “விரைவில் அதற்கான பதிலை இந்தியா தெரிந்து கொள்ளும்’’ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
 | 

இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படுமா?: டிரம்ப் பதில்

இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு, “விரைவில் அதற்கான பதிலை இந்தியா தெரிந்து கொள்ளும்’’ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷியாவிடம் இருந்து பிற நாடுகள் பாதுகாப்புத் துறை சார்ந்த ஒப்பந்தங்களை மேற்கொள்ள அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதேபோன்று ஈரான் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இதனை மீறும் நாடுகள் மீதும் பொருளாதாரத் தடைகளை விதிக்கும் வகையில் அமெரிக்கா நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால், தடையை மீறும் நட்பு நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கலாமா? அல்லது விதிவிலக்கு அளிக்கலாமா? என்று இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் டிரம்பிடம் உள்ளது.

இந்தச் சூழலில், ரஷியாவிடம் இருந்து ரூ.40,000 கோடி மதிப்பில் எஸ்-400 டிரையம்ப் வகை பாதுகாப்பு உபகரணத்தை வாங்குவதற்கு இந்தியா கடந்த வாரம் ஒப்பந்தம் மேற்கொண்டது. மேலும், ஈரானிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கவும் இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆகவே, இந்தியா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று டிரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘’விரைவில் இதற்கான பதில் இந்தியாவுக்கு தெரியவரும். இதுகுறித்து நீங்கள் யோசிக்கும் முன்பே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்’’ என்று டிரம்ப் தெரிவித்தார். அவரது இந்த பதில், இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுமா அல்லது விதி விலக்கு அளிக்கப்படுமா என்பதை தெளிவாகக் குறிப்பிடும் வகையில் இல்லை. முன்னதாக, ரஷியாவை புறக்கணிக்கும் விதமாகவே பொருளாதார தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும், நட்பு நாடுகளின் ராணுவ வலிமையை குறைக்கும் வகையில் அது அமையாது என்றும் டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் கடந்த வாரம் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP