காட்டுத்தீக்கு இரையாகும் கலிஃபோர்னியா; பலி 31 ஆக உயர்வு!

அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தீ பரவி வரும் 3 இடங்களிலும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்புப்படை வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
 | 

காட்டுத்தீக்கு இரையாகும் கலிஃபோர்னியா; பலி 31 ஆக உயர்வு!

அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. 

அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத் தலைநகர் சாக்ரமென்டோ நகருக்கு வடக்கே கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பற்றிய காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. கடந்த 8ம்தேதி முதல் பரவிவரும் இந்த காட்டுத்தீயினால், இதுவரை அங்கு சுமார் 1 லட்சம் ஏக்கர் அளவிலான நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது. வடக்கில் உள்ள பாரடைஸ் எனும் நகரம் இந்த காட்டுத் தீயால் முற்றிலும் சேதமடைந்துள்ளது. மேலும் மூன்று இடங்களில் தீ வேகமாகப் பரவி வருகிறது. 

சுமார் 6500 வீடுகள் இத்தீயில் எரிந்த நிலையில், தீ தொடர்ந்து பரவி வருவதால் பாதிப்பு அதிகமாகும் என தெரிவிக்கப்படுகிறது. முதற்கட்டமாக 25 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போது தீ பரவி வரும் 3 இடங்களிலும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்புப்படை வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இதனிடையே இதுகுறித்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்,  "காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவதற்காக, கலிஃபோர்னியா மாகாண அரசுக்கு, அமெரிக்க அரசு,  ஆண்டுதோறும் பெரும் தொகையை வழங்கி வருகிறது. இருந்தபோதிலும் காட்டுத்தீ விவகாரத்தில் அவ்வாறு நடைபெறுவதை தடுத்து நிறுத்தும் வகையிலான நிரந்தரத் தீர்வை அந்த மாகாணம் இதுவரை கண்டடையவில்லை. அப்படிப்பட்ட சிந்தனையும் அந்த மாகாண அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் அமெரிக்க அரசு தொடர்ந்து கலிஃபோர்னிய மாகணத்துக்கு பெரும் தொகையை வழங்குவதில் எந்த பயனும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, ஆண்டுதோறும் பயனில்லாத வகையில் செலவிடப்பட்டு வரப்படும் நிதி உதவியை நிறுத்துவதே இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும்" என்று  எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP