அமெரிக்க பள்ளி துப்பாக்கிச் சூட்டுக்கு யார் காரணம்? பழி போடும் டிரம்ப்

அமெரிக்க பள்ளி துப்பாக்கிச் சூட்டுக்கு யார் காரணம்? பழி போடும் டிரம்ப்
 | 

அமெரிக்க பள்ளி துப்பாக்கிச் சூட்டுக்கு யார் காரணம்? பழி போடும் டிரம்ப்


அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளியில் இந்த வாரம் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 17 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.

கொலை செய்த அதே பள்ளியின் முன்னாள் மாணவன், AR-15 எனப்படும், அசால்ட் ரக துப்பாக்கியை பயன்படுத்தினான். அமெரிக்க துப்பாக்கி சட்டங்களில் இதுபோன்ற பெரிய ஆயுதங்களை பொதுமக்கள் எளிதாக வாங்கி வைத்துக்கொள்ள முடியும் என்பதால், சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வர வலியுறுத்தப்பட்டது.

ஆனால், ஆளும் குடியரசு கட்சி, பல ஆண்டுகளாக துப்பாக்கி உரிமைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தக் கூடாது என்பதில் தீர்க்கமாக உள்ளதால், அந்த கோரிக்கைகளை மறுத்துவிட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அதிபர் டிரம்ப்புக்கு பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பித்த சில மாணவர்கள், துப்பாக்கி சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வர டிரம்ப்பை வலியுறுத்தினார். இதுகுறித்து மாணவர்கள் சேர்ந்து போராட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்த அந்த மாணவன், ஏற்கனவே யூடியூப்பில் இதுபோல கொலை செய்யபோவதாக சில மாதங்களுக்கு முன் எழுதியிருந்தான். அதுபற்றி அமெரிக்க புலனாய்வுத்துறை எஃப்.பி.ஐ  சரியாக விசாரணை நடத்தவில்லை என டிரம்ப் தற்போது குற்றம் சாட்டியுள்ளார்.

அதிபர் தேர்தலில் டிரம்ப் தரப்பினர் ரஷ்யர்களோடு சேர்ந்து கூட்டுச்சதி செய்தார்களா என்பது குறித்து எஃப்.பி.ஐ விசாரித்து வருவதை அடிக்கடி விமர்சனம் செய்யும் டிரம்ப், இதுகுறித்து ட்விட்டரில், "பல ஆதாரங்கள் இருந்தும் எஃப்.பி.ஐ, கொலையாளியை தடுக்கவில்லை. ரஷ்யா கூட்டுச்சதி போன்ற போலியான குற்றசாட்டுகளை விசாரணை செய்து தங்கள் நேரத்தை வீணடித்து வருகின்றனர்" என எழுதினார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP