வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி ராஜினாமா!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் தலைமை அதிகாரியாக செயல்பட்டு வந்த ஜான் கெல்லி, இந்த வருட இறுதியுடன் தனது பதவியை ராஜினாமா செய்வார் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
 | 

வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி ராஜினாமா!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் தலைமை அதிகாரியாக செயல்பட்டு வந்த ஜான் கெல்லி, இந்த வருட இறுதியுடன் தனது பதவியை ராஜினாமா செய்வார் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றவுடன், தேர்தலில் தனக்கு பெரிதும் உதவிய ரைன்ஸ் பிரீபஸை வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக நியமித்தார். அமெரிக்க அரசின் நிர்வாக தலைமையான வெள்ளை மாளிகையில், அதிபருக்கு அடுத்து மிக முக்கியமான பதவி இதுவாகும்.  சுமார் ஆறு மாதங்கள் வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக பணியாற்றிய பிரீபஸை, கடந்த ஆண்டு ஜூலை மாதம்  ட்ரம்ப் பதவியில் இருந்து நீக்கினார்.

தொடர்ந்து வெள்ளை மாளிகையின் அதிகாரிகள் மற்றும் முக்கிய துறை செயலாளர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து வந்த நிலையில், ராணுவ ஜெனரலாக பணியாற்றிய ஜான் கெல்லியை தலைமை அதிகாரியாக ட்ரம்ப் நியமித்தார். பதவியேற்றவுடன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து, வெள்ளை மாளிகையை கட்டுக்குள் கொண்டுவர கெல்லி முயற்சித்தார்.

சமீபத்தில் ட்ரம்ப்புக்கும், கெல்லிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. கெல்லிக்கு தெரியாமல், ட்ரம்ப் முக்கிய முடிவுகள் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கெல்லி விரைவில் பதவியில் இருந்து விலக இருப்பதாக கூறப்பட்டது. அதை உறுதிப்படுத்துமாறு, இந்த ஆண்டு இறுதியுடன் கெல்லி பதவி விலகுவர் என ட்ரம்ப் அறிவித்தார்.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்று 2 ஆண்டுகள் கூட முடிவடையாத நிலையில், வெள்ளை மாளிகையில் முக்கிய பதவி வகித்து வந்த தலைமை செய்தி தொடர்பாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், தலைமை அதிகாரி உட்பட 30க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் அல்லது ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP