எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்: ட்ரம்புக்கு வட கொரியா பதில்

அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் எப்போது வேண்டிமானாலும் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளோம் என வட கொரியா வெளியுறவுதுறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
 | 

எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்: ட்ரம்புக்கு வட கொரியா பதில்

எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்: ட்ரம்புக்கு வட கொரியா பதில்அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் எப்போது வேண்டிமானாலும் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளோம் என வட கொரியா வெளியுறவுதுறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

சமீபத்தில், அணு ஆயுத சோதனை கூடங்களை தான் கூறியதுபடி அழித்த வடகொரியா, அமெரிக்காவின் சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. இதனையடுத்து அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே வார்த்தைப்போர் ஏற்பட்டது. இதன் உச்சமாக, வடகொரியா அதிபர் கிம் உடனான சந்திப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ரத்து செய்வதாக அறிவித்தார். 

இந்த நிலையில் ட்ரம்பின் முடிவுக்கு வட கொரிய தரப்பு பதில் அளித்துள்ளது. இது தொடர்பாக, வடகொரிய வெளியுறவு துறை அமைச்சர் கிம் கை குவான் கூறுகையில், "வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடையேயான சந்திப்பு இரு நாடுகளுக்கிடையே ஒரு நல்ல தொடக்கத்தை உருவாக்கும் என்பதால், அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தோம்.

இந்நிலையில் கிம் ஜாங் அன்னுடனான சந்திப்பை அதிபர் ட்ரம்ப் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது மிகவும் வருத்தம் அளிக்கிறது. நாங்கள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைகளை தீர்க்க தயாராக இருக்கிறோம்" எனக் கூறியுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP