அமெரிக்காவிலிருந்து வெளியேறுகிறோம்!- வர்த்தக போர் நீட்சியால் ஹார்லி டேவிட்சன் அறிவிப்பு 

உலக அளவில் முன்னணியில் இருக்கும் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹார்ட்லி டேவிட்சன் தனது சொந்த நாடான அமெரிக்காவில் இருந்து வெளியேறப்போவதாக அறிவித்துள்ளது.
 | 

அமெரிக்காவிலிருந்து வெளியேறுகிறோம்!- வர்த்தக போர் நீட்சியால் ஹார்லி டேவிட்சன் அறிவிப்பு 

உலக அளவில் முன்னணியில் இருக்கும் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹார்ட்லி டேவிட்சன் தனது சொந்த நாடான அமெரிக்காவில் இருந்து வெளியேறப்போவதாக அறிவித்துள்ளது.

பிரபல அமெரிக்க மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சனின் முதன்மை தயாரிப்பு ஆலைகள் அமெரிக்காவில் உள்ளது. சமீபத்தில் எழுந்துள்ள வர்த்தக போரால் பாதிக்கப்பட்டிருக்கும் அந்த நிறுவனம் தனது உற்பத்தி தொழிற்சாலைகளை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றபோவதாக அறிவித்துள்ளது. 

அமெரிக்காவில் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு வரி விதிப்பை அதிகப்படுத்தியுள்ளது. ஸ்டீல் உள்ளிட்ட உற்பத்தி பொருட்களுக்கு வரி விதிப்பை ஐரோப்பிய மற்றும் கனடா ஆகிய நாடுகளை அதிருப்தியடைய செய்தது. அதே போல, ஆசிய நாடுகளில் சீனா மற்றும் இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கும் வரி உயர்த்தப்பட்டது. 

இந்த வரி மாற்றத்தைத் திரும்ப பெறுமாறு அந்நாட்டு பிரதிநிதிகள் ட்ரம்பை வலியுறுத்தி வந்தனர். ஆனால், இதில் ட்ரம்ப் நிர்வாகம் சமரசம் செய்யாமல் இருந்ததால், அந்நாடுகளும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பை அதிகரித்துள்ளன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்க இரு சக்கர வாகனங்களுக்கு 6 சதவிகிதமாக இருந்த வரி விதிப்பு 31 சதவிகிதமாக்கியது. 

இந்த வரி விதிப்பால் அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துக்கு இழப்பு அதிகமானது. இதையொட்டி அந்த நிறுவனம், ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள வரி விதிப்புக்காக அமெரிக்காவில் இருக்கும் உற்பத்தி ஆலைகளில் வேலைகளை நிறுத்திவிட்டு, வேறு நாடுகளில் இருக்கும் ஆலைகளில் உற்பத்தியைப் பெருக்கப் போகிறோம். அது தான் ஐரோப்பாவில் இருக்கும் எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரே வழி எனத் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் இருக்கும் பிரச்னையை அமெரிக்கா சீக்கிரமே முடிவுக்கு கொண்டு வரும் என்று நம்புகிறோம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதனிடையே, இந்த விவகாரம் குறித்து அதிபர் ட்ரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில், "ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஹார்லி டேவிட்சன் முதல் நிறுவனமாக வெள்ளைக் கொடி காட்டியுள்ளது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. அவர்களுக்காக நான் அதிகமாக போராடினேன். அவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரி விதிக்காது. அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துக்கு ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் உற்பத்தி ஆலைகள் இருக்கின்றன. இது தவிர தாய்லாந்தில் உற்பத்தி ஆலையை தொடங்க அந்த நிறுவனம் முயன்று வருகிறது. எனவே ஹார்லி டேவிட்சனின் இந்த முடிவு உறுதியானால் இந்த உற்பத்தி ஆலைகளில் தயாரிப்பு அதிகரிக்கப்படும் நிலை ஏற்படும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP