ஹூஸ்டனில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

டிரம்ப் - மோடி சந்திப்பின் மூலம், இரு நாட்டு உறவுகள் மேலும் வலுப்படும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். பலத்த கரகோஷத்தினிடையே மேடைக்கு வந்த மோடி, அங்கு குழுமியிருந்தோரை பார்த்து கை அசைத்து வணக்கம் தெரிவித்தார்.
 | 

ஹூஸ்டனில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் ஒரே மேடையில் உரையாற்றவுள்ளனர். 

50 ஆயிரம் பேர் கூடியிருக்கும் அரங்கத்தில் ஹஸ்டன் மேயர் சில்வெஸ்டர், முக்கிய விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய நபர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். 

இவர்கள் மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி நடந்து வர, அங்கிருந்தோர், பலத்த கரகோஷம் எழுப்பினர். மேயர் சில்வெஸ்டர், அறிமுக மற்றும் வரவேற்புரை ஆற்றினார். அங்கு கூடியிருந்த அனைத்து முக்கிய தலைவர்களும், மோடியை வரவேற்று பேசினர். 

டிரம்ப்  - மோடி சந்திப்பின் மூலம், இரு நாட்டு உறவுகள் மேலும் வலுப்படும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். பலத்த கரகோஷத்தினிடையே மேடைக்கு வந்த மோடி, அங்கு குழுமியிருந்தோரை பார்த்து கை அசைத்து வணக்கம் தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP