'அமெரிக்காவுக்கு வரவேற்கிறோம்' - அட்டைப்படத்தில் ட்ரம்பை விமர்சித்த டைம் இதழ்

'அமெரிக்காவுக்கு வரவேற்கிறோம்' என்ற அட்டைப்பட காட்சியுடன் டொனால்டு ட்ரம்ப்பை டைம் இதழ் கடுமையாக விமர்சித்துள்ளது.
 | 

'அமெரிக்காவுக்கு வரவேற்கிறோம்' - அட்டைப்படத்தில் ட்ரம்பை விமர்சித்த டைம் இதழ்

ட்ரம்பைப் பார்த்து சிறுமி அழுவது போன்று 'அமெரிக்காவுக்கு வரவேற்கிறோம்' என்ற அட்டைப்படத்தை வெளியிட்டு டொனால்டு ட்ரம்ப்பை டைம் இதழ் கடுமையாக விமர்சித்துள்ளது. 

அமெரிக்காவில் குடியேறிகளை கைது செய்யும்போது குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து வெவ்வேறு இடத்தில் அடைத்து வைக்குமாறு ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார். மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறும் மக்களை கைதுசெய்யும் போது பின்பற்றப்படும் ட்ரம்பின் இந்தக் கொள்கைக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு எழுந்தது.  அவரது மனைவி மெலினியா ட்ரம்பும் இந்த விவகாரத்தை கடுமையாக எதிர்த்தார். அதேபோல ட்ரம்பின் குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் எதிர்த்தனர். 

அதன்படி கடந்த மே 5-ஆம் தேதி முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை பெற்றோரிடம் பிரிக்கப்பட்டு சுமார் 2342 குழந்தைகள் தனி இடத்தில் அடைத்து வைக்கப்பட்டதாக அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்காவில் குடியேறுபவர்கள் மற்றும் அகதிகள் விவகாரத்தில் டொனால்டு ட்ரம்ப் எந்த ஒரு கனிவும் கிடையாது என்ற நிலையில் செயல்பட்டு வருகிறார். இவ்வாறு அவர் கொண்டுவரும் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்றமும் எதிர்க்கிறது. ஆனால் தன்னுடைய நிலைப்பாட்டில் எந்தஒரு மாற்றமும் கிடையாது என்பது போலவே ட்ரம்ப் செயல்பட்டு வந்தார்.  

குடியேறிகளில் பெற்றோரையும் குழந்தைகளையும் பிரித்து சிறைபிடிக்கும் இந்த முறையில், கடந்த 6 வார காலங்களில் மட்டும் 2 ஆயிரம் குடும்பங்கள் பிரிக்கப்பட்டது. அடைக்கலம் கோரி அமெரிக்காவிற்குள் நுழைபவர்கள் பாதுகாப்பு படைகளால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுகிறார்கள். 

கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. குடும்பங்கள் பிரிக்கப்பட்டதால் நூற்றுக்கணக்கான சிறார்களும் தடுப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். இது எதிர்பார்க்காத ஒரு கொள்கை முடிவு என சமூக ஆர்வலர்கள், மனித உரிமைகள் குழுக்கள் விமர்சனம் செய்தன. இதனையடுத்து திட்டத்தை கைவிட அமெரிக்க அரசு முடிவு செய்தது. ஆனால் எப்போதிலிருந்து முடிவு கைவிடப்படும் என்று தெரியவில்லை. 

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை கடுமையாக விமர்சனம் செய்யும் வகையில் டைம் இதழ் அட்டைப்படம் வெளியிட்டுள்ளது. டைம் இதழின் அட்டைப்படத்தில் டொனால்டு ட்ரம்ப் அழுது கொண்டிருக்கும் சிறுமியை உற்று பார்ப்பது போன்றும், அதற்கு மேல் 'அமெரிக்காவுக்கு வரவேற்கிறோம்' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. அழுது கொண்டிருக்கும் சிறுமியின் புகைப்படம், சமீபத்தில் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படும் இரண்டு வயது சிறுமியினுடையது. பலரையும் உலுக்கியது இந்த புகைப்படம். இந்த படத்தைதான் டொனால்டு ட்ரம்புக்கு எதிராக டைம் இதழ் தனது அட்டைப்படத்தில் பயன்படுத்தியுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP