வடகொரியா மீது போர்தொடுக்க மாட்டோம்: அமெரிக்கா

வடகொரியாவுக்கான அமெரிக்க பிரதிநிதி, அந்நாட்டின் மீது போர் தொடுத்து அதை கைப்பற்றும் நோக்கம் அமெரிக்காவுக்கு இல்லையென்றும், கொரிய போரை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 | 

ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய வடகொரியாவுக்கான அமெரிக்க பிரதிநிதி ஸ்டீபன் பைகுன், "அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர தயாராக உள்ளார். அவ்வளவு தான்; போர் முடிந்தது. வடகொரியாவை கைப்பற்றும் நோக்கமும், வடகொரிய அரசை கவிழ்க்கும் நோக்கமும் அமெரிக்க அரசுக்கு இல்லை" என்று கூறினார். 

70 ஆண்டுகளாக தொடர்ந்து இருந்து வரும் பகையை முடிக்கவே அதிபர் ட்ரம்ப்பும் எண்ணுவதாக அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு, வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், நடத்திய சந்திப்பில், கொரிய போரை நிறுத்த உள்ளதாக ஒப்புதலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP