உங்க இஃப்தார் விருந்தை நீங்களே வச்சுக்கோங்க: ட்ரம்ப்புக்கு இஸ்லாமிய அமைப்புகள் பதிலடி

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இஸ்லாமிய அமைப்புகளுக்கு வழங்கவுள்ள இஃப்தார் விருந்தில் கலந்துகொள்ள பெரும்பாலான இஸ்லாமிய அமைப்புகள் மறுப்பு தெரிவித்துள்ளன.
 | 

உங்க இஃப்தார் விருந்தை நீங்களே வச்சுக்கோங்க: ட்ரம்ப்புக்கு இஸ்லாமிய அமைப்புகள் பதிலடி

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இஸ்லாமிய அமைப்புகளுக்கு வழங்கவுள்ள இஃப்தார் விருந்தில் கலந்துகொள்ள பெரும்பாலான இஸ்லாமிய அமைப்புகள் மறுப்பு தெரிவித்துள்ளன. 

1990ல் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் ஆண்டுதோறும் வெள்ளை மாளிகையில் இஃப்தார் விருந்து வழங்கும் சம்பிரதாயத்தை துவக்கி வைத்தார். அதற்கு முன் பல அதிபர்கள் இதை கடைபிடித்திருந்தாலும், 1990க்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் இந்த விருந்து வழங்கப்படும். கிளிண்டன், புஷ் மற்றும் ஒபாமா என முக்கிய இரண்டு கட்சியை சேர்ந்த அதிபர்கள் இதை தொடர்ந்து கடைபிடித்து வந்தனர். ஆனால், ட்ரம்ப் கடந்த ஆண்டு பதவியேற்ற பின், தனது முதல் ஆண்டு இஃப்தார் விருந்தை ரத்து செய்தார். இது அமெரிக்க இஸ்லாமியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மேலும், இஸ்லாமியர்களுக்கு எதிராக அவர் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள், பயண தடைகள் போன்றவையால் அந்நாட்டில் இஸ்லாமியர்கள் மீது நடக்கும் இனவெறி சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு திடீரென இஃப்தார் விருந்து நடத்த வெள்ளை மாளிகை முடிவெடுத்துள்ளது. ஆனால், இந்த விருந்தில் தலைநகர் வாஷிங்டனில் உள்ள முன்னணி இஸ்லாமிய அமைப்புகள் கலந்துகொள்ள போவதில்லை என தெரிவித்துள்ளனர்.  "தேர்தலில் நின்றது முதல், அமெரிக்காவில் வாழும் இஸ்லாமியர்கள் மற்றும் வெளிநாட்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக ட்ரம்ப் கூறும் கருத்துக்களும், எடுத்துள்ள நடவடிக்கைகளும், அமெரிக்க பண்பாட்டுக்கு எதிரானது. இஸ்லாமிய நாடுகள் மீது பயணத் தடை, குடியேற்றத் தடை உள்ளிட்ட பல நடவடிக்கைகள் அரசியலமைப்புக்கு எதிரானது. அவரது ஆட்சியில், மதவெறி கொண்டவர்களின் செயல்கள் அதிகரித்துள்ளது. அதனால் இந்த விருந்தில் நாங்கள் கலந்துகொள்ளப் போவதில்லை" என அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP