வீடியோ கேமில் தோற்றதால் துப்பாக்கிச் சூடு நடந்ததா?

அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகாணத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில், கொலையாளி உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு வீடியோ கேமில் தோல்வியடைந்ததே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.
 | 

ப்ளோரிடாவின் ஜேக்சன்வில் பகுதியில், வீடியோ கேமிங் போட்டி நடைபெற்று வந்தது. பெரிய அளவில் நடத்தப்பட்ட போட்டியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர். அப்போது திடீரென அங்கிருந்த ஒருவர் துப்பாக்கியால் சுடத் துவங்கினார். இரண்டு பேர் இதில் கொல்லப்பட்டனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து கொலையாளி தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

24 வயதான குற்றவாளி டேவிட் கட்ஸ், தனது கைத்துப்பாக்கியை பயன்படுத்தி இந்த கொடூர சம்பவத்தை நிகழ்த்தியுள்ளது தெரிய வந்துள்ளது. வீடியோ கேமில் தோற்றதால் ஏற்பட்ட விரக்தியில் தான் அவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், இதுகுறித்து ஃப்ளோரிடா போலீசார் எதுவும் கூற மறுத்துவிட்டனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP