சிரியாவில் போர்க்குற்றங்கள்: ஐ.நா எச்சரிக்கை

சிரியாவின் கிழக்கு கூட்டாவில் நடைபெற்று வரும் தொடர் தாக்குதல்களுக்கு இடையே, சிரியா அரசு படைகள் போர்க்குற்றங்களில் ஈடுபடுவது போல தெரிவதாக ஐ.நா தூதர் எச்சரித்துள்ளார்.
 | 

ஐ.நா-வுக்கான மனித உரிமை தூதர் சீத் ராத் அல் ஹுசேன் இதுகுறித்து பேசியபோது, "கிழக்கு கூட்டாவிலும் சிரியாவின் மற்ற பகுதிகளிலும் நாம் பார்த்துவரும் சம்பவங்கள் போர்குற்றங்களாக இருக்க வாய்ப்புள்ளது.  இவர்கள் மீது எந்த கரிசனமும் காட்டாமல், சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்" என கூறினார்.

8 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் போரில், அதிபர் பஷார் அல் சாத் தலைமையிலான சிரிய அரசு, ராணுவத்தை வைத்து ரசாயன குண்டு தாக்குதல்கள் நடத்தியதாக பல குற்றச்சாட்டுகளும் ஏற்கனவே உள்ளது. இதற்கிடையே கடந்த மாதம் கிழக்கு கூட்டா பகுதியில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பல்வேறு வான்வழி தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். 

கடந்த மாதம் நடந்த தாக்குதல்களில் சிரியாவில் 1,389 பேர் கொல்லப்பட்டதாகவும், அதில் 1,073 பேர் பொதுமக்கள் என்றும், சுமார் 580 பேர் கூட்டா பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து ஐ.நா போர்நிறுத்தம் கொண்டு வர வலியுறுத்தி வரும் நிலையில் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP