விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் மத தீவிரவாத அமைப்புகள்: சிஐஏ அறிக்கைக்கு கிளம்புகிறது எதிர்ப்பு

விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள அமைப்புகள் மத தீவிரவாத அமைப்புகள் என்று அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 | 

விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் மத தீவிரவாத அமைப்புகள்: சிஐஏ அறிக்கைக்கு கிளம்புகிறது எதிர்ப்பு

விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள அமைப்புகள் மத தீவிரவாத அமைப்புகள் என்று அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தும், மத்திய அரசு இதற்கு எதிர்விக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. 

அமெரிக்க உளவு அமைப்பான மத்திய புலனாய்வு அமைப்பு(சிஐஏ) சமீபத்தில் வேர்ல்டு ஃபேக் ட்புக் (உலக உண்மைத் தகவல்நூல்) என்ற அறிக்கையை வெளியிட்டது. 

இதில் பல்வேறு நாடுகளின் வரலாறு, செயல்பாடுகள், மத அமைப்புகள், அரசியல் அமைப்புகள், மக்கள், அரசுகள், கட்சிகள், பொருளாதாரம், எரிசக்தி, புவியியல், தகவல்தொடர்பு, போக்குவரத்து, ராணுவம் போன்ற 267 நாடுகளின் விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த நுல், கடந்த 1962-ம் ஆண்டு முதல் அச்சிடப்படும் இந்த நூல் அமெரிக்க எம்பிக்களுக்கு தகவலுக்காக அச்சிடப்படுகிறது. கடந்த 1975-ம் ஆண்டு முதல் பொது மக்களின் பார்வைக்கு வந்தது.  தற்போது வெளியாகி இருக்கும் வேர்ல்டு ஃபேக் ட்புக்கில், இந்தியாவில் வி.எச்.பி, பஜ்ரங் தளம் ஆகியவை மதரீதியான தீவிரவாத அமைப்புகள் என தெரிவித்துள்ளது.

அதேசமயம், அரசியல் ரீதியாக பின்னல் இருந்து ஆட்சி அதிகாரத்தில் பல்வேறு நெருக்கடிகளை அரசுக்கு அளிக்கும் குழுக்கள். ஆனால், தேர்தலில் போட்டியிடாத அமைப்புகள் என்ற அடிப்படையில், ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பட்டியலிட்டுள்ளது. இதே போல, காஷ்மீரின் ஹுரியத் மாநாட்டுக் கட்சி, ஜாமியாத் உலேமா இ ஹிந்த் ஆகியவை அரசியல் நெருக்கடி தரும் அமைப்புகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ், ஹூரியத் மாநாட்டுக்கட்சியை பிரிவினைவாத அமைப்புகள் என்றும், ஜாமியத் உலேமா இ, மதரீதியான அமைப்பு என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க புலனாய்வு அமைப்பின் அறிக்கைக்கு வி.எச்.பி மற்றும் பஜ்ரங் தள அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

சிஐஏ-வுக்கு கடும் எதிர்ப்பு

இது குறித்து பஜ்ரங் தள பொதுச்செயலாளர் சுரேந்திர ஜெயின், "அமெரிக்க சிஐஏ என்பது இந்தியாவுக்கு விரோதமானது. விஎச்பி அமைப்பு தேசியவாத அமைப்பு, நாட்டுக்காக உழைக்கும் அமைப்பு என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்.  இது முற்றிலும் போலியானது. 

இந்தியாவுக்கு விரோதமான மனநிலையில் அமெரிக்க சிஐஏவின் அறிக்கை இருக்கிறது. சிஐஏவுக்கு எதிராக விஎச்பி அமைப்பு போராட்டம் நடத்தும். பின்லேடனை உருவாக்கியதே சிஐஏதான். ஆதலால், எங்களுக்குப் பாடம் கற்பிக்க அமெரிக்க நிறுவனத்துக்கு உரிமையே இல்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட கோரிக்கை வைப்போம்" என்றார். 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP