தாய்லாந்து பிரதமரின் விநோத செயல்..வைரலாகும் வீடியோ..

பத்திரிக்கையாளர்களின் கேள்வியில் இருந்து தப்பிக்க தாய்லாந்து பிரதமர் ஒரு வினோத முறையை கையாண்டுள்ளார்.
 | 

தாய்லாந்து பிரதமரின் விநோத செயல்..வைரலாகும் வீடியோ..


பத்திரிக்கையாளர்களின் கேள்வியில் இருந்து தப்பிக்க தாய்லாந்து பிரதமர் ஒரு வினோத முறையை கையாண்டுள்ளார். 

தாய்லாந்து தலைநகரான பாங்காங்கில் உள்ள பிரதமர் அலுவலகம் முன்பாக நேற்று பத்திரிக்கையாளர்கள் கூடியிருந்தனர். அந்த நேரத்தில் வெளியே வந்த பிரதமர் பிரயுத் செய்தியாளர்களை பார்த்தவுடன் தனது உதவியாளரை நோக்கி கை காட்டினார். உடனே உதவியாளர், பிரதமரின் கட் அவுட் ஒன்றை கொண்டு வந்தார். அதை பிரதமர், அலுவலகம் முன்பு வைக்க சொன்னார். 

பின்னர் பிரதமர் செய்தியாளர்களை நோக்கி, 'நீங்கள் என்ன கேட்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ இதனிடம் கேளுங்கள். தங்கள் கேள்விகளுக்கு இது பதில் சொல்லும்' என்று தனது கட்-அவுட்டை நோக்கி கைகாட்டி விட்டு வேகமாக சென்று விட்டார். இதை பார்த்த செய்தியாளர்கள் திகைத்து நின்றனர்.  பின்பு சிலர் பிரதமரின் கட்-அவுட் முன்பு நின்று போட்டோ எடுத்துக்கொண்டனர். 

தற்போது தாய்லாந்தில் அரசியல் சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் பத்திரிக்கையாளர்களின் கேள்வியில் இருந்து தப்பிக்க பிரதமர் இதுபோன்று நடந்து கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் குற்றம் சாட்டி வருகின்றன.


newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP