தேர்தலில் களமிறங்குகிறாரா மாஜி துணை அதிபர்?; ஹிலாரி கிளிண்டனுடன் சந்திப்பு

2020 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் அதிபர் ஒபாமாவின் துணை அதிபர் ஜோ பைடனை, முன்னாள் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
 | 

தேர்தலில் களமிறங்குகிறாரா மாஜி துணை அதிபர்?; ஹிலாரி கிளிண்டனுடன் சந்திப்பு

2020 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் அதிபர் ஒபாமாவின் துணை அதிபர் ஜோ பைடனை, முன்னாள் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், 2020 தேர்தலில் அவரை வீழ்த்த, எதிர்கட்சியின் சார்பில் போட்டியிட பல்வேறு வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். எதிர்கட்சியான ஜனநாயக கட்சியின் உட்கட்சித் தேர்தல், இன்னும் சில மாதங்களில் துவங்க இருக்கிறது. ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளனர். இதில், இந்திய பூர்வீகம் கொண்ட கமலா ஹாரிஸ் மற்றும் துள்சி கப்பார்டு ஆகியோரும் அடக்கம். 

பல்வேறு வேட்பாளர்கள் களத்தில் குதித்தாலும், உட்கட்சி தேர்தலை வெல்லும் அளவுக்கு பிரபலமான வேட்பாளர்கள் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் மற்றும் பெர்னி சாண்டர்ஸ் ஆகியர் இருவர் தான் என அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். சோசியலிச கொள்கைகளை கொண்ட பெர்னி சாண்டர்ஸ், 2016 தேர்தலில், அப்போதைய முன்னணி வேட்பாளாரான ஹிலாரி கிளிண்டனுக்கு இறுதி வரை கடும் போட்டி கொடுத்தது தோல்வியடைந்தார். தற்போது மீண்டும் போட்டியிடவுள்ளதாக சமீபத்தில் அறிவித்துள்ளார். 

ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோ பைடன், இன்னும் தேர்தலில் நிற்பதாக தெரிவிக்கவில்லை. 2008 முதல் 2016 வரை அதிபர் ஒபாமாவின் துணை அதிபராக பணியாற்றிய இவர், தேர்தல் களத்தில் இறங்கினால், அதிபர் தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளராக அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்நிலையில், 2016ல் ஜனநாயக கட்சியின் சார்பாக போட்டியிட்டு, டொனால்ட் ட்ரம்ப்பிடம் தோல்வியடைந்த ஹிலாரி கிளிண்டன், அதிபர் களத்தில் குதித்துள்ள அனைத்து வேட்பாளர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், அதிபர் தேர்தலில் களமிறங்க உள்ளதாக கூறப்படும் ஜோ பைடனை ஹிலாரி சந்தித்துள்ளார். இதனால், விரைவில், முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் தேர்தல் களத்தில் குதிக்கலாம் என கூறபடுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP