வெனிசுலா சிறையில் கலவரம்: 29 கைதிகள் பலி; 20 போலீசார் படுகாயம்!

வெனிசுலா நாட்டில் கைதிகள் மற்றும் போலீசாருக்கு இடையே நடந்த மோதலில் 29 கைதிகள் பலியாகியுள்ளனர். மேலும் 20க்கும் அதிகமான போலீசார் படுகாயமடைந்துள்ளனர்.
 | 

வெனிசுலா சிறையில் கலவரம்: 29 கைதிகள் பலி; 20 போலீசார் படுகாயம்!

வெனிசுலா நாட்டில் கைதிகள் மற்றும் போலீசாருக்கு இடையே நடந்த மோதலில் 29 கைதிகள் பலியாகியுள்ளனர். மேலும் 20க்கும் அதிகமான போலீசார் படுகாயமடைந்துள்ளனர். 

தென்அமெரிக்க நாடான வெனிசுலாவில் அகாரிகுவா (Acarigua) என்ற இடத்தில் உள்ள சிறையில் பயங்கர கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த சிறையில் நூறு பேர் இருக்க வேண்டிய அறையில், 500 பேர் வரை அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த  கைதிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில், கைதிகளை காண வந்த பார்வையாளர்களை சிறைவாசிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்தனர்.

இதையடுத்து போலீசார் அங்கு வந்ததும், போலீசாருக்கும், சிறைக்கைதிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து வாக்குவாதம் முற்றவே, சிறைக்கைதிகள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை சுட ஆரம்பித்தனர். தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலில் சிறைக் கைதிகள் 29 பேர் பலியாகினர். அதேபோன்று போலீசார் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சிறையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட சிறைக்கைதிகள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP