அமெரிக்கா: துப்பாக்கியுடன் விளையாடிய 2 வயது குழந்தை பலி!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இரண்டு வயதேயான ஒரு குழந்தை, தனது தந்தைக்கு சொந்தமான துப்பாக்கியை வைத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்து, குழந்தை பலியானான்.
 | 

துப்பாக்கி கலாச்சாரம் அதிகம் ஓங்கியிருக்கும் அமெரிக்காவில், பல்வேறு குடும்பங்கள் தங்களது வீட்டிலேயே பாதுகாப்புக்காக துப்பாக்கிகளை வைத்திருப்பது வழக்கம். இது அதிகமாகியுள்ளதால், குழந்தைகள், சிறுவர்கள் மத்தியில் நடக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அந்நாட்டில் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருவது வாடிக்கை.

இந்தநிலையில் இரு தினங்களுக்கு முன், ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஜோன்ஸ்போரோ என்ற ஊரில், ஒரு குழந்தை துப்பாக்கி குண்டு பட்டு காயமடைந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, இரண்டு வயது சிறுவன், துப்பாக்கியால் சுடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்த போது, அந்த இரண்டு வயது சிறுவன், தனது தந்தையின் அறைக்குள்ளே சென்று அவரது தலையணைக்கு அடியில் இருந்த துப்பாக்கியை எடுத்து விளையாடி உள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி அந்த சிறுவனை நோக்கி வெடித்து, பரிதாபமாக பலியாகியுள்ளான். 

அவசர உதவிக்குழு, அந்த குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்வதா வேண்டாமா என போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP