ஈரான் கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்த இந்தியாவுக்கு அமெரிக்கா மிரட்டல்

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா, சீனா போன்ற நாடுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா நேரடியான மிரட்டல் விடுத்துள்ளது.
 | 

ஈரான் கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்த இந்தியாவுக்கு அமெரிக்கா மிரட்டல்

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா, சீனா போன்ற நாடுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா நேரடியான மிரட்டல் விடுத்துள்ளது. மேலும் அதற்கான காரணம், விளக்கம் எதுவும் அளிக்க முடியாது என்றும் குறிப்பிட்டு கெடு விடுத்துள்ளது. 

அமெரிக்கா ஈரானுடன் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து சமீபத்தில் விலகுவதாக ட்ரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா பல அடுக்கு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. அமெரிக்கா போல தனது நட்பு நாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்கா அதன் வெளியுறவுத்துறையின் மூலம் நிர்பந்தித்து வருகிறது. 

இந்த நிலையில் ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளது. உறபத்தி குறைவால் அதன் தேவை அதிகரிப்பின் காரணமாக கச்சா எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளது. 

ஈராக், சவுதி அரேபியா மற்றும் ஈரானிடமிருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெயை ஏற்றுமதி ஆகிறது. இதையடுத்து ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி, வரும் நவம்பர் மாதம் 4ஆம் தேதிக்குள் முழுமையாக கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. 

அதோடு, இதற்கு ஒத்துழைப்பு அளிக்காத நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிக்கவும் தயங்க மாட்டோம் எனவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஈரான் அதிபர் ஹஸன் ரவுகானி,  "அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம். எங்கள் நாட்டின் சுதந்திரத்தையும், இஸ்லாமிய நன்முறைகளையும் பாதுக்காக்க ஒருநாளும் தவற மாட்டோம்" என தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே பரஸ்பர வரிவிதிப்பு நடவடிக்கைகளால் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக போர் மூண்டுள்ளது. தற்போது ஈரானிடம் விலகி இருக்க அமெரிக்கா கேடு விடுத்திருப்பது வெளியுறவு கொள்கைகளில் சிக்கலான சூழலை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP