அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி: பிரெட் கவனாக் செனட் வாக்கெடுப்பில் வெற்றி

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய பிரெட் கவனாக், செனட் உறுப்பினர்கள் மத்தியில் நடத்தப்பட்ட, அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில் வெற்றியடைந்துள்ளார். அவர் பதவியேற்பு கிட்டத்தட்ட உறுதியானது
 | 

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி: பிரெட் கவனாக் செனட் வாக்கெடுப்ப

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரெட் கவனாக், செனட் உறுப்பினர்கள் மத்தியில் நடத்தப்பட்ட அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.  

உச்ச நீதிமன்ற பதவி வகிக்க ஒப்புதல் வழங்கும் வாக்கெடுப்பு செனட் உறுப்பினர்கள் மத்தியில் நடத்தப்பட வேண்டும் என்று  அமெரிக்க அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நடைமுறைப்படிஅமெரிக்க செனட் சபையில் நிரந்தர உறுப்பினர்கள் மத்தியில், பிரெட் கனவாக், நீதிபதியாக பதவி வகிப்பதற்கான ஒப்புதல் அளிப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் அவருக்கு 51 வாக்குகள் ஆதரவாகவும், 49 வாக்குகள் எதிராவும் கிடைத்தன. இதையடுத்து அவர் நூலிழையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் அவர் நீதிபதியாக பதவி ஏற்பது ஏறக்குறையாக உறுதியாகி உள்ளது. இவருடனான அமர்வில்  நீதிபதிகள் சோனியா சோடோமெயோர் மற்றும் எலினா காகன் ஆகியோர் இடம்பெற உள்ளனர்.  

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பிரெட் கவனாக்கை அதிபர் டொனால்டு ட்ரம்ப் பரிந்துரைத்தார். அதையடுத்து பிரெட் கவனாக் மீது இரண்டு பெண்கள் திடீரென பாலியல் குற்றச்சாட்டை எழுப்பினர். இதையடுத்து பாலியல் புகாருக்கு ஆளான பிரெட் கவனாக்கை நீதிபதி பதவிக்கு தேர்வு செய்யக்கூடாது என அந்நாட்டில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. எனினும் அவரை நீதிபதியாக நியமிக்க ஆளும் குடியரசுக் கட்சி தீவிர முயற்சி மேற்கொண்டது. ட்ரம்பின் முழு ஆதரவும் இவருக்கு இருந்தது. 

வாக்கெடுப்பு நடைபெறுதற்கு முன்னதாக பிரெட் கவனாக் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு மீதான எப்.பி.ஐ. அமைப்பு மேற்கொண்ட விசாரணையின் அறிக்கை, அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. அமெரிக்க நாடாளுமன்ற வழக்கத்தின்படி இந்த முடிவுகள் பொதுவெளியில் தெரிவிக்கப்பட அனுமதி கிடையாது. ஆனால் அந்த அறிக்கையை செனட் உறுப்பினர்கள் ஆய்வுக்கு உட்படுத்த முடியும். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP