ஹௌடி மோடி நிகழ்ச்சிக்கு அமெரிக்க சீக்கியர் அமைப்பு வரவேற்பு

ஹௌடி மோடி நிகழ்ச்சியில் பங்கு கொள்ள அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரத்திற்கு செல்லும் பிரதமர் மோடியை, அமெரிக்காவின் சீக்கிய சமுகத்தின் தலைவர் ஜெஸ்ஸி சிங் மகிழ்ச்சியாக வரவேற்க இருப்பதாக கூறி யூட்யூபில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
 | 

ஹௌடி மோடி நிகழ்ச்சிக்கு அமெரிக்க சீக்கியர் அமைப்பு வரவேற்பு

ஹௌடி மோடி நிகழ்ச்சியில் பங்கு கொள்ள அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரத்திற்கு செல்லும் பிரதமர் மோடியை, அமெரிக்காவின் சீக்கிய சமுகத்தின் தலைவர் ஜெஸ்ஸி சிங் மகிழ்ச்சியாக வரவேற்க இருப்பதாக கூறி யூடியூபில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அமெரிக்காவின் எரிபொருள் வர்த்தகத்தின் தலை நகரமென கருதப்படும் ஹூஸ்டன் நகரில் உள்ள, என்.ஆர்.ஜி அரங்கத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நடக்கவிருக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் 50,000 இந்திய வம்சாவழியினர் கலந்து கொள்ள பதிவு செய்துள்ளனர். 

பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க ஹூஸ்டன் நகரம் பெரிய பெரிய பேனர்களுடன் தயாராகிக் கொண்டிருப்பதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், மோடியுடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் - ம் மேடையில் தோன்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP