அமெரிக்கா- சீக்கிய குடும்பத்தினர் 4 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 4 பேர் அவர்களின் வீட்டுக்குள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 | 

அமெரிக்கா- சீக்கிய குடும்பத்தினர் 4 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 4 பேர் அவர்களின் வீட்டுக்குள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

அமெரிக்காவின் ஒகியோ மாநிலம் வெஸ்ட் செஸ்டர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சீக்கிய குடும்பத்தினர் வசித்து வந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அந்த வீட்டிற்குள் புகுந்த ஒரு மர்ம நபர், வீட்டில் இருந்தவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளான். இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர்.

இந்த சம்பவம் குறித்து அவர்களது உறவினர் ஒருவர் அமெரிக்க அவசர போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரும் ஹக்கிகத் சிங் பனாக், அவரது மனைவி பரம்ஜித் கவுர் , அவர்களின் மகள் ஷாலிந்தர் கவுர் , ஹக்கிகத் சிங் பனாக்கின் மைத்துனி அமர்ஜித் கவுர் ஆகியோர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது தெளிவாக தெரிவில்லை. இந்த தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா, டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது இனவெறி தாக்குதலாக இருக்காது என நம்புவதாகவும், கொல்லப்பட்டவர்களில் ஒருவர் இந்தியாவில் வசிப்பவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP