பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும்: நிக்கி ஹேலி

சர்வதேச அளவில் அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வருவதாலும், தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து அடைக்கலம் கொடுத்து வருவதாலும், பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதியுதவியை அமெரிக்கா நிறுத்த வேண்டும், என முன்னாள் அமெரிக்க ஐநா தூதர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார்.
 | 

இந்திய பூர்வீகம் கொண்ட அமெரிக்காவின் முன்னாள் ஐநா தூதர் நிக்கி ஹேலி, பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவதை நிறுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையில், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கிவரும் நிதி குறைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், அது தொடர்பாக மேலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து அடைக்கலம் கொடுத்து வருவதாலும், அமெரிக்க நிலைப்பாட்டுக்கு எதிராக சர்வதேச அளவில் நடந்துகொள்வதாலும், பாகிஸ்தானை நட்பு நாடாக கருதுவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும், என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதிய ஒரு செய்தி குறிப்பில், "அமெரிக்கா ஒரு நாட்டுக்கு நிதி வழங்கும் போது, அதற்கு பதிலாக அவர்களிடம் இருந்து சிலவற்றை எதிர்பார்ப்பதில் எந்த தவறும் இல்லை. 2017ம் ஆண்டு, பாகிஸ்தான் அமெரிக்காவிடம் இருந்து சுமார் 1 பில்லியன் டாலர்களை, நிதியுதவியாக பெற்றது. அவற்றில் பெரும்பாலான நிதி பாகிஸ்தான் ராணுவத்திற்கு சென்றது. சாலைகள் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களுக்கு அதில் சிறிய பங்கே சென்றது. உதவித்தொகை நண்பர்களுக்கு மட்டுமே தான் செல்ல வேண்டும். ஐநாவில் அமெரிக்கா எடுத்த நிலைப்பாடுகளுக்கு எதிராக பாகிஸ்தான் 76% வாக்களித்துள்ளது. இதைவிட முக்கியமாக, தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து வருகிறது" என்றும் அவர் கூறினார்.

ஏற்கனவே, ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, பாகிஸ்தானுக்கு வழங்கி வரும் நிதியுதவியை குறைத்துள்ள நிலையில், மேலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், என்று ஹேலி வலியுறுத்தினார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP