ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருந்து விலகியது அமெரிக்கா!

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகுவதாக திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருந்து விலகியது அமெரிக்கா!

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகுவதாக திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உலக நாடுகளிடையே அமைதியை நிலைநாட்டும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் செயல்பட்டு வருகிறது. மனித உரிமைகள் கவுன்சிலின் பெரும்பாலான முடிவுகள் அமெரிக்காவை சார்ந்தே தான் இருந்து வருகிறது. உலக நாடுகளுக்கு இடையே போர் ஏற்படும் பட்சத்தில் அதை ஓரளவுக்கு குறைக்கும் விதத்தில் மனித உரிமைகள் கவுன்சில் செயல்படுகிறது. கடந்த 2006ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் தற்போது 47 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. மற்ற நாடுகளின் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டு, அதில் அமெரிக்கா முக்கிய முடிவு முன்னெடுக்கும் நிலையில், தற்போது அமெரிக்காவே இந்த அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. 

ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருந்து விலகியது அமெரிக்கா!

இதுகுறித்து ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே, "மனித உரிமைகள் கவுன்சில் உலக நாடுகளுக்கு இடையே பாகுபாடு காட்டுகிறது. மனித உரிமை மீறல் செய்பவர்களை அமைப்பு பாதுகாக்கிறது. கேலிக்கூத்தாக செயல்படும் இந்த அமைப்பின் முடிவுகளில் அமெரிக்காவுக்கு உடன்பாடு இல்லை. இது அரசியல் சார்புள்ள சாக்கடை" என விளக்கமளித்துள்ளார். 

முன்னதாக அமெரிக்கா பாரிஸ் உடன்படிக்கை, யுனெஸ்கோ மற்றும் ஈரானுடனான உடன்படிக்கையில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. மேலும், காஸா எல்லை விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எதிராக மனித உரிமைகள் கவுன்சில் நடவடிக்கை எடுப்பதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வந்தது. மனித உரிமைகள் கவுன்சில் அமைப்பை முறைப்படுத்த மற்ற நாடுகள் தடையாக இருப்பதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியிருந்தது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP