சிரியாவை தாக்க அமெரிக்கா தயார்; பிரிட்டனும் ஆதரவு

சிரியாவில் நடந்த ரசாயன குண்டு தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் பொருட்டு, அமெரிக்கா அங்கு தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். இந்நிலையில், அமெரிக்க பதில் தாக்குதலுக்கு, பிரிட்டன் அரசு ஆதரவு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 | 

கடந்த சில தினங்களுக்கு முன், சிரியாவின் டூமா நகரில் நடந்த தாக்குதலில், 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், இதனால், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் மூச்சு திணறல், வாயில் நுரை போன்ற கடுமையான பாதிப்புகள் காணப்பட்டன. இந்நிலையில், கிளர்ச்சியாளர்களை தாக்கும் பொருட்டு பொதுமக்கள் இருந்த பகுதியில், ரசாயன குண்டுகளை அந்நாட்டு அரசு வீசியதாக சர்வதேச நாடுகள் குற்றம் சாட்டின. 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்த விவகாரம் குறித்து சிரிய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். சிரிய அதிபர் அசாத்தை மிருகம் என விமர்சித்த ட்ரம்ப், சிரியாவில் பதில் தாக்குதல் நடத்தவுள்ளதாக கூறினார். தங்கள் ஆதரவு கொண்ட சிரியாவின் மீது, தாக்குதல் நடத்த வேண்டாம், என ரஷ்யா எச்சரித்த போதும், "நிச்சயம் தாக்குதல் நடக்கும்" என்றும் "காத்திருங்கள் ரஷ்யா" என்றும் ட்ரம்ப் ட்விட்டரில் எழுதினார். 

ட்ரம்ப் தெரிவித்தது, அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் மற்றும் ஆலோசகர்களுக்கே அதிர்ச்சியை அளித்ததாக கூறப்பட்டது. ஆனால், தற்போது, சிரியா மீது விரைவில் தாக்குதல் நடத்த அமெரிக்கா ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பிரிட்டன் அரசு, அமெரிக்காவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

பிரதமர் தெரசா மே, இதுகுறித்து தனது அமைச்சரவையுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் நிச்சயம் சிரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. ஆனால், எப்படிப்பட்ட நடவடிக்கை என்பது குறித்து தொடர்ந்து ஆலோசனை நடந்து வருகிறதாம். இந்த விவகாரத்தில் ஏற்கனவே அதிருப்தி தெரிவித்துள்ள அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளுடன் சேர்ந்து தாக்குதல் நடத்தவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP