அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வழக்கறிஞர் வீட்டில் ரெய்டு!

சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் சொந்த விவகாரங்களுக்கான வழக்கறிஞர் மைக்கேல் கோஹனின் வீடு மட்டும் அலுவலகங்களில், எஃப்.பி.ஐ ரெய்டு நடத்தியுள்ளது.
 | 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வழக்கறிஞர் வீட்டில் ரெய்டு!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வழக்கறிஞர் வீட்டில் ரெய்டு!

சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் சொந்த விவகாரங்களுக்கான வழக்கறிஞர் மைக்கேல் கோஹனின் வீடு மட்டும் அலுவலகங்களில், எஃப்.பி.ஐ ரெய்டு நடத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு நெருக்கமானவர்கள் மற்றும் ஊழியர்கள், தேர்தல் நேரத்தில், ரஷ்ய உளவுத்துறையுடன் தொடர்பு வைத்திருந்ததாக விசாரணை நடந்து வருகிறது. முன்னாள் எஃப்.பி.ஐ தலைவர் ராபர்ட் முல்லர் தலைமையில் ஒரு சிறப்பு கமிஷன் இந்த விசாரணையை நடத்தி வருகிறது. தேர்தலில் ரஷ்ய உளவுத்துறை ட்ரம்ப்புக்கு உதவியதாக ஏற்கனவே அமெரிக்க புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. 

அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் சில வருடங்களுக்கு முன் கூறி வந்தார். அதிபர் தேர்தல் நடந்த நேரத்தில் இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது அவர் எதுவும் கூற மறுத்துவிட்டார். ட்ரம்ப் தரப்பில் இருந்து அவருடன் ஒப்பந்தம் போடப்பட்டதால் அவர் மவுனமாக இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், ட்ரம்ப்பின் சொந்த விவகாரங்களை பார்த்துக் கொள்ளும் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன், ஸ்டார்மி டேனியல்ஸுக்கு சுமார் 85 லட்ச ரூபாய் கொடுத்ததாக ஒத்துக்கொண்டார். 

ஆனால், ட்ரம்ப்புக்கு தெரியாமல் இதை கொடுத்ததாக கோஹன் கூறிவந்தார். ட்ரம்ப் சார்பில் கோஹன் அந்த தொகையை டேனியல்ஸுக்கு கொடுத்திருந்தால், அது தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகும். எனவே,  இதுகுறித்து சிறப்பு கமிஷன், விசாரணை செய்து வந்ததாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், இன்று திடீரென கோஹனின் வீடு மற்றும் அலுவலகங்களில் எஃப்.பி.ஐ அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். ஏற்கனவே, எஃப்.பி.ஐ அதிகாரிகளை தினம் விமர்சனம் செய்து வரும் ட்ரம்ப், இந்த ரெய்டால் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. 

முன்னதாக ட்ரம்ப்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன், நடிகை டேனியல்ஸுக்கு கொடுத்த தொகையை ஒப்புக்கொண்டதால், அவருடன் போட்ட ரகசிய ஒப்பந்தம் செல்லாது என டேனியல்ஸ் கூறியிருந்தார். ட்ரம்ப்புடன் தான் வைத்திருந்த கள்ளத்தொடர்பு பற்றி, தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டியும் அளித்திருந்தார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP