’வட கொரியாவில் அணுஆயுதங்களை அழிக்க திட்டம் தீட்டும் அமெரிக்கா’

வடகொரியாவில் உள்ள அணுஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இந்த ஆண்டுக்குள் அழிக்கும் பணியை அமெரிக்கா முன்னின்று செய்யும் என்று ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார்.
 | 

’வட கொரியாவில் அணுஆயுதங்களை அழிக்க திட்டம் தீட்டும் அமெரிக்கா’

வடகொரியாவில் உள்ள அணுஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இந்த ஆண்டுக்குள் அழிக்கும் பணியை அமெரிக்கா முன்னின்று செய்யும் என்று ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, " இந்த ஆண்டுக்குள் வடகொரியாவில் உள்ள அணுஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை அழிக்கும் பணியை அமெரிக்கா முன்னின்று செய்யும்.  இது தொடர்பாக அமெரிக்க தூதரக அதிகரி மைக் பாம்பியோ விரைவில் வட கொரியா சென்று ஆலோசனை நடத்துவார். இதன்மூலம் வடகொரியவுக்கு எதிரான தடைகள் அனைத்தையும் ரத்து செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள வாய்ப்பாக அமையும்" என்று தெரிவித்துள்ளார்.  

வடகொரியா - தென்கொரியா ஆகிய இரு நாடுகளும் கொரிய போருக்கு பின்னர் எதிரி நாடுகளாக இருந்து வந்தன. வட கொரியாவின் அணுஆயுத உற்பத்தி சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்த நிலையில், தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக நின்றது. வட கொரியாவுக்கு எதிரான போர் பயற்சிகளை மேற்கொண்டு அதனை மிரட்டியது.

இதனால் அமெரிக்காவுடன் வடகொரியா மோதும் விதமாக, அணு ஆயுதங்கள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களை உருவாக்கி அமெரிக்கா மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக பகிரங்கமாக அறிவித்தது. அமெரிக்காவும் வட கொரியாவுக்கு கடும் மோதல் போக்கை கடைபிடித்து வந்தன. 

இந்த நிலையில் இரு நாடுகளுக்கு மத்தியில் சமரசம் ஏற்படுத்த சீனா முயற்சி செய்தது. கடந்த வருடம் நடந்த பாராலிம்பிக்ஸ் போட்டியில் தென்கொரியாவும் வட கொரியாவும் பங்கேற்றதிலிருந்து பல கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.  பேச்சுவார்த்தைக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் வழிவகுத்தார். 

தொடர்ந்து அமெரிக்கா-வடகொரியா அதிபர்கள் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி சிங்கப்பூரில் இருநாட்டு அதிபர்களும் பேசி, சமரச ஒப்பந்தம் செய்துகொண்டனர். ஆனால் இப்போது வரை ஒப்பந்தம் குறித்த எந்த தகவலும் வெளிச்சத்துக்கு வரவில்லை. 

அதில், வடகொரியாவில் உள்ள அணுஆயுதங்கள் அனைத்தையும் அழித்து விடுவதாக கிம் ஜாங் உன் ஒப்புதல் அளித்ததாக கூறப்பட்டது. ஆனால், வடகொரியா அணு ஆயுத ஆராய்ச்சிகளை கைவிடவில்லை என்று  38 நார்த் என்ற தென்கொரிய இணையதளம் செய்தி வெளியிட்டது. இந்த விவகாரத்தில் வடகொரியாவின் மர்மம் நீடித்தே வருகிறது. ஏற்கெனவே வட கொரியா மீது நம்பகத்தன்மை இல்லாமல் இருந்த அமெரிக்காவின் சந்தேகம் இதனால் மேலும் வலுவானது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP