அமெரிக்கா- அரசுத்துறையின் முடக்கம் நீடிக்க வாய்ப்பு

சட்ட விரோத குடியேற்றங்களை தடுக்கும் வகையில் மெக்சிக்கோ எல்லையில் சுவர் எழுப்ப ஐந்து பில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்க வேண்டும் என அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
 | 

அமெரிக்கா- அரசுத்துறையின் முடக்கம் நீடிக்க வாய்ப்பு

அமெரிக்க அரசுத்துறைகளின் முடக்கம் அடுத்த வாரமும் நீடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

சட்ட விரோத குடியேற்றங்களை தடுக்கும் வகையில் மெக்சிக்கோ எல்லையில் சுவர் எழுப்ப 5 பில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்க வேண்டும் என அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். 

இது தொடர்பாக குடியரசுக் கட்சியினருக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையே உடன்பாடு ஏற்படாததால், அரசுத் துறைகளின் செலவுக்கு நிதி ஒதுக்கும் மசோதா நிறைவேறாமல் உள்ளது.

இதனால் பல்வேறு அரசுத்துறைகள் முடங்கியுள்ளன. இதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் அமெரிக்க அரசுத்துறைகளின் முடக்கம் அடுத்த வாரமும் நீடிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே, சட்டவிரோதமாக குடியேறுபவர்களை பாதுகாக்கும் வகையில், ஜனநாயகக் கட்சியினர் அரசுத்துறைகளை முடக்கி வைத்திருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP