அமெரிக்கா - வடகொரியா பேச்சுவார்த்தை முறிவு?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து, பேச்சுவார்த்தைகளை முறித்துக்கொள்ளப் போவதாகவும், மீண்டும் அணு ஆயுத தயாரிப்பில் இறங்க இருப்பதாகவும் வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
 | 

அமெரிக்கா - வடகொரியா பேச்சுவார்த்தை முறிவு?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து, பேச்சுவார்த்தைகளை முறித்துக்கொள்ளப் போவதாகவும், மீண்டும் அணு ஆயுத தயாரிப்பில் இறங்க இருப்பதாகவும் வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தார். அணுஆயுதங்கள் தயாரிப்பதை நிறுத்த அமெரிக்கா வலியுறுத்தியது. பேச்சுவார்த்தைக்கு முன்னதாகவே, அமெரிக்க தரப்பில் வடகொரியா அணு ஆயுதங்களை கைவிட வாய்ப்புகள் மிக குறைவு என ட்ரம்ப்புக்கு அமெரிக்க வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்பட்டதாக இரண்டு தரப்பிலும் கூறினர்.

ஆனால், அதன்பின் வடகொரியா அணு ஆயுத தயாரிப்பை கைவிட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து, கடந்த மாத இறுதியில் ட்ரம்ப் - கிம் ஜோங் உன் மீண்டும் சந்தித்தனர். இந்த சந்திப்பில், வடகொரியா மீதுள்ள பொருளாதார தடைகளை நீக்கினால் மட்டுமே அணு ஆயுதங்களை கைவிடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என கிம் கூறிய நிலையில், ட்ரம்ப் பாதியிலேயே எழுந்து வந்துவிட்டார். இதனால் பேச்சுவார்த்தைகள் முறிந்தன. 

இந்த நிலையில், வடகொரிய துணை வெளியுறவுத்துறை அமைச்சர் சூ சுன் ஹுய், அமெரிக்காவை கடுமையாக சாடினார். அமெரிக்கா கேங்ஸ்டர் கும்பல் போல பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அமெரிக்காவுக்கு அடிபணிய வேண்டிய நிலை தங்களுக்கு இல்லை என்றும் கூறினார். "அமெரிக்கா கூறியதை போல அனைத்து தடைகளை நீக்க வேண்டும் என வடகொரியா தரப்பில் கூறப்படவில்லை. முக்கியமான 5 தடைகளை மட்டும் நீக்கவே வலியுறுத்தப்பட்டது" என்றும் கூறினார். 

இந்த சம்பவத்தால், அமெரிக்கவுடனான அணு ஆயுத தடை பேச்சுவார்த்தைகள் முற்றிலும் முறிய வாய்ப்புள்ளதாகவும், இதுகுறித்து அதிபர் கிம் விரைவில் அறிவிப்பை வெளியிடுவார் என்றும் அவர் கூறினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP