அமெரிக்க கடற்படையின் அதி முக்கிய தகவல்கள் திருட்டு:  சீன ஹேக்கர்கள் கைவரிசை 

ஆழ் கடல் வழியே தாக்குதல் புரிவது உள்ளிட்ட அதிமுக்கிய நுணுக்கமான அமெரிக்க கடற்படையின் தகவல்களை அதன் ஒப்பந்ததாரர்களிடமிருந்து சீன ஹேக்கர்கள் திருடியுள்ளனர்.
 | 

அமெரிக்க கடற்படையின் அதி முக்கிய தகவல்கள் திருட்டு:  சீன ஹேக்கர்கள் கைவரிசை 

அமெரிக்க கடற்படையின் ஆழ் கடல் வழியே தாக்குதல் புரிவது உள்ளிட்ட அதிமுக்கிய நுணுக்கமான தகவல்களை அதன் ஒப்பந்ததாரர்களிடமிருந்து சீன ஹேக்கர்கள் திருடியுள்ளனர். 

இதுகுறித்து, அமெரிக்காவில் இருந்து வெளியாகும், வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டிருக்கும், "அமெரிக்க கடற்படை ஒப்பந்ததாரர் ஒருவரின் கம்ப்யூட்டர்களில் இருந்து, சீன அரசுடன் தொடர்புடைய, ஹேக்கர்கள் முக்கியமான தகவல்களை திருடியுள்ளனர். 

இந்தாண்டு, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடந்த, இந்த இணையதள தகவல் திருட்டுகளின் மூலம், 614 ஜிகாபைட் திறன் தகவல்கள் களவாடப்பட்டுள்ளன.  இந்த தகவல்கள் அனைத்தும், கடலுக்கு அடியில் போர் புரிதல் தொடர்பான ரகசியங்கள். அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்களில் பயன்படுத்தும், 'சூப்பர்சோனிக்' ஏவுகணை எதிர்ப்பு தொழில் நுட்பத்தை தயாரிக்கும் ரகசிய திட்டங்கள் ஆகியவை, திருடுபோன தகவல்களில் முக்கியமானவை.

தவிர, 'ஸீ டிராகன்' எனப்படும், ரகசிய திட்டம், நீர்மூழ்கி கப்பலில் பயன்படுத்தப்படும், ரேடியோ அறை திட்டம் தொடர்பான தகவல்களும் திருடுபோயுள்ளன. ராணுவ தொழில் நுட்பத்தில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. இந்த நிலையை மாற்றி, கிழக்கு ஆசியாவில் பெரிய சக்தியாக உருவெடுக்க சீனா நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் ராணுவ தகவல்களை, ஹேக்கர்கள் மூலம் சீனா திருடி வருகிறது. இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP