அமெரிக்க ராணுவ விமானம் விபத்து: 9 வீரர்கள் தீயில் கருகி பலி

அமெரிக்காவில் ராணுவ விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
 | 

அமெரிக்கா பியூர்டோ ரிக்கோ தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த W-130 என்ற விமானம் 9 வீரர்களுடன் சென்றது. ஜார்ஜியா மாவட்டம் சவன்னா என்ற பகுதியில் அருகே சென்று கொண்டிருக்கும் போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்து நொறுங்கியது. கீழே விழுந்ததில் விமானம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் விமானத்தில் இருந்தவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தனர். தகவல் அறிந்து ராணுவ மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு சென்று சென்றனர். தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.

பியூர்டோ ரிக்கோ தேசிய பாதுகாப்பு படை சார்பில் உயிரிழந்த வீரருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்-ம் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP