தென்கொரியாவில் 70 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அமெரிக்க ராணுவ முகாம் மூடல்!

தென்கொரியாவில் 70 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அமெரிக்க ராணுவ முகாம் மூடப்படுகிறது.
 | 

தென்கொரியாவில் 70 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அமெரிக்க ராணுவ முகாம்  மூடல்!

தென்கொரியாவில் 70 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அமெரிக்க ராணுவ முகாம் மூடப்படுகிறது. 

1945ல் இரண்டாம் உலகப்போரின்போது, தென்கொரியாவின் சியோல் நகரில் அமெரிக்க ராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டது. சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த இந்த ராணுவ முகாம் மூடப்படுவதாக  அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. 

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், தற்போது வடகொரியா தனது அணு ஆயுத சோதனையை கைவிடும்படி கூறியுள்ளது. எதிரி நாடுகளாக இருந்த தென் கொரியா- வடகொரியா இணைந்துள்ளது. சமீபத்தில், வரலாற்றில் முக்கிய நிகழ்வான வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு நடைபெற்றது. முன்னதாக வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தியதால் தான் தென் கொரியாவில் அமெரிக்க ராணுவம் செயல்பட்டது. தற்போது வடகொரியா அணு சோதனையை கைவிட்டதால் ராணுவ முகாம் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு பதிலாக, சியோல் நகரின் தெற்கு பகுதியில் உள்ள பியாங்டெக் என்ற பகுதியில் புதிய ராணுவ முகாம் ஒன்றையும் நிறுவி உள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP