அமெரிக்க இடைக்கால தேர்தல்: ஆளுங்கட்சி இடத்தை கைப்பற்றும் ஜனநாயக கட்சி 

அமெரிக்க செனட் அவையின் 100 உறுப்பினர்களுக்கான இடங்களில் 80 இடங்களுக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் 45 சதவீத இடங்களை ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியும் 35 இடங்களை ஜனநாயகக் கட்சியும் கைப்பற்றியுள்ளது.
 | 

அமெரிக்க இடைக்கால தேர்தல்: ஆளுங்கட்சி இடத்தை கைப்பற்றும் ஜனநாயக கட்சி 

அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் முடியும் தருவாயில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி விர்ஜீனியா மற்றும் புளோரிடா மாகாணங்களில் ஆகிய 2 இடங்களை ஜனநாயக கட்சி வென்று உள்ளது. இந்த இடங்கள் குடியரசுக் கட்சியால் குறிவைக்கப்பட்டவை ஆகும். 

2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றதோடு, அவரது குடியரசு கட்சி, நாடாளுமன்றத்தின் இரு சபைகளையும் பெரும்பான்மையோடு கைப்பற்றியது. 2 ஆண்டுகளாக குடியரசு கட்சி ஆட்சி புரிந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆட்சிக்காலத்தின் மீதான வாக்கெடுப்பாக இந்த இடைக்கால தேர்தல்கள் கருதப்படுகிறது.

அமெரிக்காவின் கிழக்கு பகுதி மாகாணங்களில் வாக்குப்பதிவு முடிந்து வாக்குச்சாவடிகள் மூடப்பட்டு வருகின்றன.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசி மற்றும் 50 அமெரிக்க மாகாணங்களில் வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை தொடங்கி நடந்த வருகிறது.  முன்னதாக, இந்த இடைக்கால தேர்தல்களில், தனது கட்சியான குடியரசு கட்சிக்கு ஆதரவு சேகரிக்கும் கடைசி கட்ட முயற்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈடுபட்டார்.

''நாளைய தேர்தல் நம் சாதனைகள் அனைத்துக்கும் பதில் கூறுவதாக அமையும்'' என்று ட்ரம்ப் கடைசியாக நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார்.

இந்த இடைக்கால தேர்தல்களில், பிரதிநிதிகளின் முழு சபைக்கான 435 உறுப்பினர்களையும், 100 உறுப்பினர் கொண்ட செனட்டின் 33 உறுப்பினர்களையும் அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்காவில் நடந்த இடைத்தேர்தல்களில் இம்முறைதான் மிக அதிக அளவு வாக்குப்பதிவு நடந்திருக்கக்கூடும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தற்போதைய நிலவரப்படி செனட்டின் 100 உறுப்பினர்களுக்கான இடங்களில் 80 இடங்களுக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் 45 சதவீத இடங்களை ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியும் 35 இடங்களை ஜனநாயகக் கட்சியும் கைப்பற்றியுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP