புல்வாமா தாக்குதலுக்கு அமெரிக்காவில் இந்தியர்கள் கண்டனம்!

புல்வாமா தாக்குதலை கண்டிக்கும் விதமாக அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள், பாகிஸ்தானை எதிர்த்து ஆவேச போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹூஸ்டன் நகர் முழுவதும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இந்தியர்கள் பங்கேற்றனர்.
 | 

புல்வாமா தாக்குதலுக்கு அமெரிக்காவில் இந்தியர்கள் கண்டனம்!

புல்வாமா தாக்குதலை கண்டிக்கும் விதமாக அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள், பாகிஸ்தானை எதிர்த்து ஆவேச போராட்டத்தில் ஈடுபட்டனர். 

புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் 14-ந்தேதி தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 

இதனையடுத்து, பெரும்பாலான வெளிநாடுகளில் வசித்து வரும் இந்திய வம்சாவளியினர் புல்வாமா தாக்குதலை கண்டித்து, பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹூஸ்டன் நகர் முழுவதும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், உலக பயங்கரவாத நாடு பாகிஸ்தான், பயங்கரவாதத்தை நாட்டின் கொள்கையாக பின்பற்றுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை இந்திய வம்சாவளியினர் ஏந்தி பேரணியாக சென்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP