ஹுவேய் நிர்வாகியின் மீது கிரிமினல் வழக்கு தொடுத்தது அமெரிக்கா!

சீன மொபைல் நிறுவனமான ஹுவேய்யின் மூத்த நிர்வாகி மெங் வன்ஸோ, பெரும் சர்ச்சைக்கு நடுவே கடந்த மாதம் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீதும், ஹுவேய் நிறுவனம் மீதும் கிரிமினல் வழக்கு தொடுத்துள்ளது அமெரிக்க அரசு.
 | 

சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு உற்பத்தி நிறுவனமான ஹுவேய்யின் தலைமை பொருளாதார அதிகாரி மெங் வன்ஸோ, கடந்த மாதம் கனடாவின் வான்கூவரில் வைத்து கைது செய்யப்பட்டார். அமெரிக்க அரசின் கோரிக்கையின் பேரில் அவரை கைது செய்ததாக கனடா தெரிவித்தது. 

இந்நிலையில், ஹுவேய் நிறுவனம் மீதும், மெங் மீதும் இன்று கிரிமினல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்கு தொடுத்துள்ளது அமெரிக்க அரசு. அமெரிக்க நிறுவனத்தின் அறிவுசார் சொத்துக்களை திருட முயன்றது, அமெரிக்க அரசின் விசாரணையில் குறுக்கிட்டது, ஆதாரங்களை அழித்தது, ஈரான் நாட்டின் மீதான பொருளாதார தடைகளை மீறியது, ஆகிய சம்பவங்களில் 20க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. 

அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் வான்கூவரில் உள்ள அவரது இல்லத்தில் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP