'கஷோகி விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கவில்லை' - சவுதியை காப்பாற்ற மழுப்புகிறதா அமெரிக்கா? 

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலை விவகாரத்தில் அமெரிக்கா எந்த இறுதி முடிவுக்கும் வந்துவிடவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அந்நாட்டு துணை அதிபர் மைக் பென்ஸும் அதே கருத்தை கூறியுள்ளார்.
 | 

'கஷோகி விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கவில்லை' - சவுதியை காப்பாற்ற மழுப்புகிறதா அமெரிக்கா? 

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலை விவகாரத்தில் அமெரிக்கா எந்த இறுதி முடிவுக்கும் வந்துவிடவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அந்நாட்டு துணை அதிபர் மைக் பென்ஸும் அதே கருத்தை கூறியுள்ளார். 

துருக்கியில் தலைநகர் இஸ்தான்புலில் உள்ள சவுதி துணை தூதரகத்தில், சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி அக்டோபர் 2–ந் தேதி படுகொலை செய்யப்பட்டார்.  அமெரிக்காவில் இருந்து வெளிவருகிற வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் கொலை செய்யப்பட்ட கசோக்கி,  கட்டுரைகள் எழுதி வந்தவர். இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு விசாரணை நடத்தி வருகிறது.

கஷோகி படுகொலை, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவிட்டுத்தான் நடந்துள்ளது என அமெரிக்க உளவு நிறுவனம் சி.ஐ.ஏ. உறுதி செய்துள்ளதாக இரு தினங்களாக செய்திகள் வெளியாகின. அதே போல ட்ரம்ப்பும் இது குறித்து 2 நாட்களில் தெளிவான விவரம் வெளியாகும் என்றார். 

இந்த நிலையில், கஷோகி படுகொலையில் அமெரிக்கா எந்த இறுதி முடிவுக்கும் வந்து விடவில்லை என அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் மாறுபட்ட கருத்தை அறிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா நடுநிலையாக செயல்படாமல் அதன் கூட்டாளியான சவுதி இளவரசர் பின் சல்மானுக்கு துணை போவதாக முதலிலிருந்தே குற்றம்சாட்டப்படுகிறது. 

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹெதர் நவார்ட் கூறுகையில், ''கஷோகி படுகொலையில் தொடர்புடையவர்கள் அனைவரும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இதில் அமெரிக்கா இறுதி முடிவுக்கு வந்து விட்டதாக வெளியான தகவல்கள் சரியானவை அல்ல. இந்த படுகொலையில் பல கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. தொடர்புடைய அனைத்து உண்மைகளையும் வெளியுறவுத்துறை தொடர்ந்து தேடும். இதற்கு மத்தியில் நாம் நாடாளுமன்றத்தையும் கலந்து ஆலோசிப்போம். பிற நாடுகளையும் கலந்து பேசுவோம்'' எனக் குறிப்பிட்டார்.

அதேபோல பப்புவா நியூ கினியா சென்றிருக்கும் அந்நாட்டு துணை அதிபர் மைக் பென்ஸும் இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

Newstm.in 

'அந்த நாயின் தலையைக் கொண்டு வா' - ஸ்கைப்பில் சவுதி இளவரசர் ஆணையிட்டதாக தகவல் 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP