அமெரிக்கா: அரசு அலுவலகம் அருகே துப்பாக்கிச்சூடு; 12 பேர் பலி

அமெரிக்காவில் விர்ஜினியா என்ற நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

அமெரிக்காவின் விர்ஜினியா பீச் அருகே மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார். அரசு அலுவலங்கள் இருக்கும் பகுதி என்பதால் இங்கு மக்கள் கூட்டமும் அதிகமாக இருந்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடப்பதை அறிந்த போலீசார், அங்கு வந்து வந்து மர்ம நபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில், அந்த மர்ம நபர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டால் 

இந்த சம்பவத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. 

இது தொடர்பான முதல் கட்ட விசாரணையில், அந்த நபர் விரக்தியின் காரணமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP