3வது முறையாக அமெரிக்க அரசு முடக்கம்!

அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் சுவர் கட்டும் திட்டத்திற்கு நிதி ஒதுக்க செனட் சபை மறுத்துவிட்டதால், அமெரிக்க அரசுக்கு நிதிவழங்கும் அதிகாரமுள்ள பட்ஜெட் மசோதா தோல்வியுற்றது. இதனால், அமெரிக்க அரசின் பல்வேறு துறைகள் முடங்கியுள்ளன.
 | 

3வது முறையாக அமெரிக்க அரசு முடக்கம்!

அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் சுவர் கட்டும் திட்டத்திற்கு நிதி ஒதுக்க செனட் சபை மறுத்துவிட்டதால்,  அந்தத் திட்டத்துடன் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த அமெரிக்க அரசுக்கு நிதிவழங்கும் அதிகாரம் படைத்த பட்ஜெட் மசோதா தோல்வியுற்றது. இதனால், அமெரிக்க அரசின் பல்வேறு துறைகள் முடங்கியுள்ளன.

அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பி, மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயலும் ஆயிரக்கணக்கானோரை தடுக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டார். முதலில் சுவர் கட்ட மெக்சிகோ நிதி வழங்கும் என ட்ரம்ப் கூறிய நிலையில், அதற்காக அமெரிக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும் என தற்போது கோரி வருகிறார். இதற்கு எதிர்க்கட்சியினர் உட்பட அவரது கட்சியை சேர்ந்த பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அமெரிக்க அரசுக்குத் தேவையான நிதியை வழங்கிடும் அதிகாரம் படைத்த நிதியறிக்கை எனப்படும் பட்ஜெட் மசோதாவில் சுவர் கட்டுவதற்காக 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.35,000 கோடி) அளவு நிதி ஒதுக்குமாறு அந்தத் திட்டத்தில் கோரியிருந்தார் அதிபர் டொனால்டு ட்ரம்ப்.

அதையடுத்து அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபையில் இந்த மசோதா நேற்று நிறைவேறியது. இருந்தபோதிலும், சுவர் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடை உள்ளடக்கி இருக்கும் எந்த மசோதாவையும் சபையில் நிறைவேற்ற முடியாது என செனட் சபை தலைமை தெரிவித்து விட்டது.

நிதிமசோதா நிறைவேறாத காரணத்தால், அமெரிக்க அரசு முடங்கியுள்ளது. 25% அமெரிக்க துறைகளுக்கான நிதி நேற்றுடன் முடிந்ததால், அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்க முடியாமல் போனது.

நிதிமசோதா நிறைவேறாத வரையில், அமெரிக்க அரசின் சார்பாக செயல்பட்டு வரும் அநேக துறைகள் நிதி இல்லாமல் முடங்கும் நிலை  ஏற்பட்டுள்ளது. மேலும் இதையடுத்து, அத்தியாவசிய அரசு சேவைகள் மட்டுமே இயங்கும். இது நடப்பாண்டில் மட்டுமே அமெரிக்க அரசு முடக்கப்படும் 3வது முறையாகும். ஜனவரியிலும், பிப்ரவரியிலும் இதே போல அமெரிக்க அரசு முடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP