சிரியாவிலிருந்து அமெரிக்க படைகள் வாபஸ்

சிரியாவில் மீதம் இருக்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகளை அழித்து விடுவோம் என்று துருக்கி அரசு உறுதி அளித்திருப்பதாகவும் . அதன்பேரில் அமெரிக்க ராணுவம் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
 | 

சிரியாவிலிருந்து அமெரிக்க படைகள் வாபஸ்

சிரியாவில் மீதம் இருக்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகளை அழித்து விடுவோம் என்று துருக்கி அரசு உறுதி அளித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு  ட்ரம்ப் கூறியுள்ளார். 


சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அமரிக்க ராணுவமும் இணைந்தது. பயங்கரவாதிகளுக்கு எதிராக ஏராளமான அமெரிக்க ராணுவ வீரர்கள் சிரியாவில் சண்டையிட்டு வந்தனர்.

இந்த சூழலில் சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக கூறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சிரியாவில் இருக்கும் அமெரிக்க படைகளை வாபஸ் பெறப்போவதாக அறிவித்திருந்தார்.

ட்ரம்பின் இந்த அதிரடி முடிவுக்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. எனினும் ராணுவ வீரர்கள் நாடு திரும்புவதற்கான உத்தரவு முறைப்படி கையெழுத்திடப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சிரியாவில் மீதம் இருக்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகளையும் அழித்து விடுவோம் என்று துருக்கி அதிபர் எர்டோகன் உறுதி அளித்திருப்பதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP