சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ்!

அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தபடி, சிரியாவிலிருந்து அமெரிக்க படைகள் நாடு திரும்ப தொடங்கியுள்ளன. சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கைகளில் அமெரிக்க ராணுவம் கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது.
 | 

சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தப்படி, சிரியாவிலிருந்து  அந்த நாட்டு ராணுவம் நாடு திரும்பத் தொடங்கியுள்ளது.

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கைகளில் அமெரிக்க ராணுவம் கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது.  இந்நிலையில் அமெரிக்கப் படைகள் மேலும் நான்கு மாதங்களுக்கு சிரியாவில் தங்கி இருந்து தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்ற கூட்டுப்படை நாடுகளின் கோரிக்கையை அதிபர் ட்ரம்ப் அண்மையில் நிராகரித்திருந்தார்.

அத்துடன் சிரியாவில் தங்கியிருக்கும் அமெரிக்கப் படை அணி விரைவில் நாடு திரும்பும் என்றும் அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தபடி,  அமெரிக்கப் படைகள் சிரியாவிலிருந்து நாடு திரும்ப தொடங்கியுள்ளன.

இதனிடையே, அமெரிக்க பாதுகாப்புத் துறை ஆலோசகர் ஜான் போல்டன் கூறும்போது, " சிரியாவில் கடைசி ஐஎஸ் பயங்கரவாதி இருக்கும் வரை, அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது 2,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத்தினர் சிரியாவில் முகாமிட்டுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP