'சவுதியின் நலனில் அக்கறை'- கஷோகி விவகாரத்தில் பின்வாங்கும் அமெரிக்கா

சவுதி பத்திரிகையாளர் கஷோகி கொல்லப்பட்ட சம்பவத்தில் சவுதி அரேபியாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்போவது இல்லை, நட்பு நாடுகளின் நலன் கருதப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.
 | 

'சவுதியின் நலனில் அக்கறை'- கஷோகி விவகாரத்தில் பின்வாங்கும் அமெரிக்கா

சவுதி பத்திரிகையாளர் கஷோகி கொல்லப்பட்ட சம்பவத்தில் சவுதி அரேபியாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்போவது இல்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.

துருக்கியில் தலைநகர் இஸ்தான்புலில் உள்ள சவுதி துணை தூதரகத்தில், சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி அக்டோபர் 2–ந் தேதி படுகொலை செய்யப்பட்டார்.  அமெரிக்காவில் இருந்து வெளிவருகிற வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் கொலை செய்யப்பட்ட கசோக்கி,  கட்டுரைகள் எழுதி வந்தவர். இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு விசாரணை நடத்தி வருகிறது.

கஷோகி படுகொலை, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவிட்டுத்தான் நடந்துள்ளது என அமெரிக்க உளவு நிறுவனம் சி.ஐ.ஏ. உறுதி செய்துள்ளதாக இரு தினங்களாக செய்திகள் வெளியாகின. அதே போல ட்ரம்ப்பும் இது குறித்து 2 நாட்களில் தெளிவான விவரம் வெளியாகும் என்றார். 
ஆனால் அதிலிருந்து பின்வாங்கும் விதமாக, கஷோகி படுகொலையில் அமெரிக்கா எந்த இறுதி முடிவுக்கும் வந்து விடவில்லை என அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் மாறுபட்ட கருத்தை அறிவித்தது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா நடுநிலையாக செயல்படாமல் அதன் கூட்டாளியான சவுதி இளவரசர் பின் சல்மானுக்கு துணை போவதாக முதலிலிருந்தே குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த நிலையில் மீண்டும் இதனை சூசகமாக ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார். சவூதி அரேபியாவுக்கு எதிராகவோ அல்லது பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு எதிராகவோ கடுமையான எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவது இல்லை என்று ட்ரம்ப் சூசகமாக குறிப்பிட்டுள்ளார். சவுதி அரேபியாவின் நலனுக்காவும் இஸ்ரேல் மற்றும் பிற நட்பு நாடுகள் நலனுக்காவும் உறுதியான நட்பு நாடாக சவுதி அரேபியாவுடன் இருக்கப்போவதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், மன்னர் சல்மானும் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானும் கசோக்கி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர். எனவே, எங்கள் புலனாய்வு அமைப்பு அனைத்து தகவல்களையும் தொடர்ந்து மதிப்பீடு செய்யும் என்றும் கூறியுள்ளார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP