தீவிரவாத எதிர்ப்பில் மெத்தனம்: பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதியை நிறுத்தியது அமெரிக்கா 

பாகிஸ்தானுக்கு அளித்து வந்த ரூ.2130 கோடி நிதி உதவியை ரத்து செய்வதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக தலைமையகமான பென்டகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 | 

தீவிரவாத எதிர்ப்பில் மெத்தனம்: பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதியை நிறுத்தியது அமெரிக்கா 

பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆண்டுதோறும் அளித்துவரும் நிதியுதவியை அமெரிக்கா நிறுத்திக் கொண்டுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தின் மேம்பாட்டிற்காக ஆண்டுதோறும் அமெரிக்கா நிதியுதவி அளித்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கூடாரமாக விளங்குவதாக சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டி இருந்தார். தொடர்ந்து, பாகிஸ்தான் மீதான இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா முன்வைத்து வருகிறது. 

இதனையடுத்து பாகிஸ்தானுக்கு அளிக்கும் நிதியுதவியை நிறுத்த இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்று அந்நாட்டுக்கு அளித்து வந்த ரூ.2130 கோடி நிதி உதவியை ரத்து செய்வதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக தலைமையகமான பென்டகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை விடுத்துள்ள அறிக்கையில், தெற்காசியாவில் அமைதியை நிலைநாட்டுவதற்கான எந்த நடவடிக்கையையும் பாகிஸ்தான் எடுக்கவில்லை. பயங்கரவாதத்தை குறைப்பதற்காக ஆக்கப்பூர்வ நடவடிக்கையையும் அந்த நாடு எடுக்கவில்லை. இதன் காரணமாக பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் பயங்கரவாத தடுப்பு நிதியை நிறுத்தப் போவதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த 300 மில்லியன் டாலர் (ரூ.2130 கோடி)உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பெண்டகன் அறிவித்துள்ளது.

அதே சமயம் பாக்., தனது போக்கை மாற்றிக் கொண்டால் மீண்டும் ஆதரவு தர தயாராக உள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் புதிய பிரதமரான இம்ரான் கானை சந்திக்க, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ அங்கு செல்லவிருக்கும் நிலையில் 

பாகிஸ்தானின் அண்டை நாடான ஆஃப்கானிஸ்தானில் பெரும்பாலான நடவடிக்கைகளை மையமாகக் கொண்டு இயங்கும் ஹக்கானி குழுவை, எல்லை தாண்டி செயல்பட பாகிஸ்தான் அனுமதிப்பதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஆஃப்கானில் தாலிபானுடன் தொடர்புடைய இக்குழு, ஆப்கானிஸ்தான் அரசுக்கு அச்சுறுத்தலாக திகழ்கிறது. மேலும் ஆப்கான் தாலிபானுடன் தொடர்பில் உள்ள பாகிஸ்தான் தாலிபான் குழுக்கள் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்துவதை இலக்காக கொண்டுள்ளன.

ஹக்கானி மற்றும் ஆப்கான் தலிபான் ஆகிய இரு குழுக்களும், ஆஃப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் அமெரிக்க படையினர் பலரும் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP