அமெரிக்காவில் மோசமான விபத்து: 2 கார்கள் மோதி 20 பேர் பலி

நியூயார்க் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட கோர விபத்தில், 20 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நியூயார்க் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 | 

அமெரிக்காவில் மோசமான விபத்து: 2 கார்கள் மோதி 20 பேர் பலி

நியூயார்க் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட கோர விபத்தில், காரில் பயணம் செய்த 20 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் அருகே உள்ள ஷோஹாரி நகரில் மாநில சாலை வழியாக சர்வதேச சாலை சந்திக்கும் இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், 2009க்கு பிறகு நடந்த மோசமான விபத்து இது என்றும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

விசாரணையில் விபத்துக்குள்ளானது சுற்றுலா வாகனம் அல்லது திருமண நிகழச்சிகாக ஏற்றிச் சென்ற வாகனமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சொகுசு கார் ஒன்று மலைப்பகுதியில் இருந்து கீழே வேகமாக இறங்கி வந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் வாகனத்தில் பயணித்தோர் மட்டுமின்றி, அப்பகுதியில் நடந்து சென்றோரும் கூட விபத்தில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்த மோசமான விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவுவதற்காக உதவி தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆளுநர் ஆண்ட்ரூ குவாமோ பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். 

இந்த விபத்து சம்பவம் குறித்து நியூயார்க் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP