இந்தியாவுக்கான வர்த்தக சலுகையை ரத்து செய்தது அமெரிக்கா!

வளர்ந்து வரும் நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு, வரிச் சலுகை வழங்கி வந்த அமெரிக்கா, தற்போது, அந்த பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியதன் மூலம், இந்தியாவுக்கான வர்த்தக சலுகையை, அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை துரதிஷ்டவசமானது என தெரிவித்துள்ள மத்திய அரசு, அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி, இந்தியாவின் நடவடிக்கைகள் அமையும் எனக் கூறியுள்ளது.
 | 

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து, 2,000க்கும் மேற்பட்ட பொருட்களை, அமெரிக்கா தங்கள் நாட்டிற்குள் இறக்குமதி செய்து கொள்கிறது. அப்படி பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகள், அதன் சந்தை மதிப்புக்கு ஏற்றார் போல், அந்நாட்டு அரசுக்கு வரி செலுத்த வேண்டும். 

இந்நிலையில், வளர்ந்து வரும் நாடுகளில் சிலவற்றிற்கு, அமெரிக்கா, ஜெனரலைஸ்டு சிஸ்டம் ஆப் பிரிபரன்ஸ் எனப்படும், ஜி.எஸ்.பி., சலுகை அளித்து வந்தது. அதில் இந்தியாவும் இருந்தது. அதன் படி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சிறப்பு வரிச் சலுகை அளிக்கப்பட்டு வந்தது. 

இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மாேடி, இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற, இரு தினங்களிலேயே, இந்தியாவுக்கான வர்த்தக சலுகையை ரத்து செய்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

அதிபரின் இந்த நடவடிக்கை, இந்திய வர்த்தகர்கள் மட்டுமின்றி, அமெரிக்க வர்த்தகர்களையும் பெரிதும் பாதிக்கும் என, அந்நாட்டு வர்த்த அமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். இதன் மூலம், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி உயரும். அதனால், அந்த பொருட்களின் விலையும் உயரும்.

அதை, அந்நாட்டு வர்த்தகர்களே ஏற்க வேண்டி வரும். அதை, கூடுதல் விலைக்கு மக்களிடம் கொண்டு சேர்க்க நேரிடும். இதனால், அமெரிக்க வர்த்தகர்கள் மட்டுமின்றி, அமெரிக்காவில் வசிப்பவர்களும் பெரிதளவு பாதிக்கப்படுவர் என, அந்நாட்டு வர்த்தகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

அதே சமயம், இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக சந்தையாக திகழும் அமெரிக்கா, திடீரென வரி, வர்த்தக சலுகையை ரத்து செய்துள்ளதால், இங்குள்ள பெரு வணிகர்களின் வர்த்தகமும் திடீர் சறுக்கலை சந்திக்கும். இதனால், புதிய சந்தையை தேடும் நிலை ஏற்படும் என்பதால், அதுவரை, பொருளாதார தேக்க நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

எனினும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை துரதிஷ்டவசமானது எனக் கூறியுள்ள மத்திய அரசு, ‛இந்தியா எப்போதும் அனைத்து மக்களின் நலனுக்காகவே சிந்திக்கிறது என்றும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மத்திய அரசு இந்த விவகாரத்தை கையாளும்’ எனவும், கருத்து தெரிவித்துள்ளது. 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP