பாலஸ்தீனத்துக்கான நிதி உதவியை ரத்து செய்தது அமெரிக்கா

பாலஸ்தீனத்துக்கான நிதி உதவியை ரத்து செய்தது அமெரிக்கா
 | 

பாலஸ்தீனத்துக்கான நிதி உதவியை ரத்து செய்தது அமெரிக்கா


பாலஸ்தீனத்துக்கு ஆண்டுதோறும் வழங்கி வந்த ரூ.825 கோடி நிதியுதவியில் தற்போது பாதி மட்டுமே வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது என அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறி உள்ளார். 

ஜெருசலேமை இஸ்ரேலில் தலைநகராக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். அதற்கு பாலஸ்தீனம் உள்ளிட்ட உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஐ.நா. பாதுகாப்பு சபையில் அமெரிக்காவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், ஐ.நா.வின் நிவாரண அமைப்பு மூலமாக பாலஸ்தீனத்து ரூ.405 கோடி மட்டுமே வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் 420 கோடியை வழங்காமல் நிறுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து கருத்து தெரிவித்த ஐ.நா அதிகாரி ஒருவர், அமெரிக்காவின் இந்த செயல்பாடானது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP